ஜாம்பி' (Zombie) நோய் என்றால் என்ன? 'ஜாம்பி' நோய் மனிதனுக்கு பரவுமா? கனடா நாட்டில் மான்களுக்கு இடையே பரவும் 'ஜாம்பி' நோய்.
'ஜாம்பி' (Zombie) நோய் என்றால் என்ன?
'ஜாம்பி' நோய் மனிதனுக்கு பரவுமா?
கனடா நாட்டில் மான்களுக்கு இடையே பரவும் 'ஜாம்பி' நோய்.
'ஜாம்பி '(zombie) ;
* ' துள்ளிக் குதித்து விளையாடும் மான்கள் போன்ற, பிற கால்நடைகளையும் சோர்வடையச் செய்யும் ஒரு வகை 'வைரஸ்', "ஜாம்பி" என்று அழைக்கப்படுகிறது.
கண்டுபிடிப்பு ;
*முதன்முதலாக 1960ல் 'அமெரிக்காவில்' கண்டுபிடிக்கப்பட்டது.
* பின்னர் இது படிப்படியாக அமெரிக்காவின் 23 மாகாணங்களில் பரவியது.
* பின்னர் 1996ல் கனடாவில் பரவியது.தற்போது மீண்டும் 2022-ல் தலைதூக்கி உள்ளது 'ஜாம்பி' நோய்.
* கனடா நாட்டிலுள்ள மான்கள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
அறிகுறிகள் ;
* ' ஜாம்பி ' நோய் மான்களின் மூளையை பாதித்து அதிக அளவில் உமிழ்நீர், சிறுநீர் வெளியேறச் செய்கிறது.
* எப்போதும் உற்சாகமாகவே காணப்படும் மான்களை மிகவும் சோர்வடைய செய்கிறது.
பரவும் முறை :
* பாதிக்கப்பட்ட மான்களின் சிறுநீர் உமிழ்நீர் வழியாக மற்ற மான்களுக்கு பரவுகிறது.
மனிதர்களுக்கு 'ஜாம்பி' நோய் பரவுமா?
* இதுவரை மனிதர்களுக்கு பரவியதாக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் எதிர்காலத்தில் பரவக் கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
'ஜாம்பி ' நோய் பரவாமல் தடுப்பது எப்படி?
* பாதிக்கப்பட்ட மான்களின் கறியை சாப்பிடுதல், வேட்டையாடுதல், மான் குட்டிகளை தடவி கொஞ்சுதல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
No comments