வள்ளுவயார் - 1 ValluvaYaar - 1
வள்ளுவ🪔யார் -1
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
திண்மைஉண் டாகப் பெறின்.
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.
Translation:
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?.
Explanation:
If woman might of chastity retain, What choicer treasure doth the world contain? .
ஔவையார் இயற்றிய கொன்றை வேந்தன்
பாடல்:
கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை
பதவுரை:
கற்பு எனப்படுவது - (பெண்களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது,
சொல் - (கணவர்) சொல்லுக்கு,
திறம்பாமை - தப்பி நடவாமையாம்.
விளக்கம்:
மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது கணவர் வார்த்தைக்கு மாறுபட்டு நடவாமையாம்.
பாடல்:
காவ றானே பாவையர்க் கழகு
பதவுரை:
காவல்தானே - (கற்புக்கு அழிவு வராமல் தம்மைக்) காத்துக்கொள்வதுதானே,
பாவையர்க்கு - பெண்களுக்கு,
அழகு - அழகாகும்.
விளக்கம்:
கற்பினின்று வழுவாமல் தம்மைக் காத்துக் கொள்வதே மாதர்களுக்கு அழகாகும்.
-வள்ளுவ🪔யார்
வருவார்....
நன்றி
வாழ்க வள்ளுவன் புகழ்
வாழ்க வையகம் 🙏
வாழ்க வளமுடன் 🙏
தெய்வப் புலவனின் வாக்கும்
தேசியக் கவியின் கனவும்
இதோ நம் கையில்......👇
🔥🔥🔥🔥
வள்ளுவ🔥தீ
🔥🔥🔥🔥
No comments