பிரபஞ்சம் நம்முடன் பதிலளித்து கொண்டே இருக்கிறது. .

 


பிரபஞ்சத்தின் நண்பர்களுக்கு வணக்கம்


🌴இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம். ஒரு இரகசியத்தை இங்கே கூறபோகிறேன்.


🌴இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம். ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.



🌴இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே. இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.


🌴இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடிகொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.


🌴ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும். உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்.


🌴இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும்போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?


🌴 இதுதான் உண்மையிலும் உண்மை. நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.


🌴சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும். ஆம் அதும் உணர்வு பூர்வமானதே. அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளும் சக்தி உள்ளது.


🌴இது உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதற்கு அறிவு உண்டு. ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு என்று எனது குருநாதர் ஆல்பர்ட் சொல்லி இருக்கிறார்.


🌴இதை நீங்கள் தயவுசெய்து கடைபிடியுங்கள். அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும். ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்


🌴நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது. மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும். இதை கூறும்போது என் கண்ணில் நீர் ததும்புகிறது. இயற்கை எவ்வளவு அற்புதமானது. 


🦋உங்கள் வாழ்க்கை முழுவதும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு பதிலளித்து கொண்டே இருக்கிறது.. 

🦋உங்களை சுற்றியிள்ள அனைத்தையும் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்... 

ஒவ்வொரு வினாடிக்கும் இந்த பிரபஞ்சம் பதிலளித்து கொண்டே இருக்கிறது. 

🦋எந்தெந்த வழிகளில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது.. கணக்கில் அடங்காத வழிகள்..அதை கண்டுபிடிப்பது , எண்ணுவது உங்கள் வேலை அல்ல..

 . 

🦋மற்றவர்கள் டைம்லைனில் போஸ்ட் அல்லது ஷேர் செய்யப்பட்டதாக இருக்கலாம், லாரி அல்லது ஆட்டோ பின்னே எழுதப்பட்ட வாசகமாக இருக்கலாம்.. நீங்கள் கேட்கும் பாட்டாக இருக்கலாம், முதலிய....இப்படி கணக்கில் அடங்காத வழிகள். 

🦋நீங்கள் எதிர்பார்த்தால் இந்த பிரபஞ்ச மேஜிக்கை உணர முடியாது..எதிர்பார்ப்பு இல்லாமல் கண்ணில் படும் / காதால் கேட்கும் விசயங்கள் தான் உங்களுக்கான மேஜிக் 

.

🦋 நீங்கள் இதை உணரும்போது தனி ஒருவன் படத்தில் வருவது போல கடைசிபக்கத்தில் உள்ள குட்டி செய்திக்கும், தலைப்பு செய்திக்கும் சம்பந்தம் இருப்பது போல உங்கள் கண்ணில் படும் முதல் விசயத்திற்கும், அடுத்த விசயத்திற்கும் தொடர்பு இருக்கும்..


 .🦋நீங்கள் விழிப்புணர்வுடன் சிந்தித்தால் உங்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் கண்ணில் படும் சின்ன சின்ன விசயங்கள் கூட உங்களுக்கான விடையாக அல்லது நீங்கள் சாதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம்.

 . 

🦋சில நேரங்களில் இவற்றை செய் அல்லது இங்கே செல் என்று பிரபஞ்சம் உங்களை மனதை தூண்டும்..

 . 

🦋கவலை அல்லது பயம் வேண்டாம், பிரபஞ்சம் உங்களுக்கு எப்போதும் நல்லனவற்றையே கொண்டு வரும்.. ஆதலால் தயக்கம் வேண்டாம்.. 

🦋அவற்றை நீங்கள் செய்யும்போது அங்கே உங்களுக்காக பல அற்புதங்கள் காத்து கொண்டிருக்கும்...

 . 

🦋உங்கள் குழப்பத்திற்கு விடையாக இருக்கலாம். (அல்லது) நீங்கள் மனதால் கேட்ட கேள்விக்கு விடையாக இருக்கலாம். (அல்லது) நீங்கள் அடுத்த செய்ய வேண்டியதாக கூட இருக்கலாம்.

 .

🦋 இந்த பிரபஞ்சம் காரணமில்லாமல் ஒரு விசயத்தை உங்கள் கண்முன் கொண்டுவருவதில்லை. 

🦋இந்த பிரபஞ்சம் அனுப்பும் சிக்னல்களை சரியாக புரிந்துகொள்பவர்களே சிகரத்தை அடைகின்றனர்..


பிரபஞ்சத்தின் நண்பர்களுக்கு நன்றி...

.

நீங்களும் சிகரம் தொட வாழ்த்துக்கள்...💐💐💐💐


நன்றி....🦋🦋🦋🦋🦋 வாழ்க வளமுடன்...💝💝💝




No comments

Powered by Blogger.