Positive Thoughts - 1 நம்மை வலிமையாக்கும் சூழல் How can we find strength during tough times in life?
நம்முடைய மன வலிமை என்பது நம்முடைய ஆன்மாவின் பலத்தில் இருந்தும், அனைத்திற்கும் மேலான பிரபஞ்சத்திடம் இருந்தும் தான் வருகிறது..
எந்த ஒரு மனிதர் தன் மனசாட்சிக்கு உண்மையாக இருக்கிராரோ அவர் நேரடியாக பிரபஞ்சத்துடன் நெருக்கமாக தொடர்பு உள்ளவராவதனால் தனக்கு மிக இக்கட்டான நேரங்களில் கூட நம்பிக்கையாக இருந்து அந்த நிலையை எளிதாகக் கடக்க அவரால் முடிகிறது.
வாழ்க்கையின் மிக அதிகமான தருணங்களில் நம்முடைய ஆழ் மனதிற்கு சோதனைகளைத் தாண்டி வர வேண்டிய சூழல்கள் பல உண்டாகின்றன.அது நம்மைத் துண்டு துண்டாக உடைத்துவிடும் என்றுதான் நாம் அனைவரும் எண்ணுவோம்.
ஆனால் நாம் அந்த நிலையை சமாளித்து, போராடி உடைந்து விடாமல் வெளிவந்து பார்க்கும் போது நமக்குள் இருக்கும் ஒரு அசாதாரண வலிமையை அதன் பின்பு தான் காண்கிறோம்..
கடினமான காலங்களில் வலிமையை நிலை நாட்ட சில முயற்சிகள் நமக்கு துணை நிற்கின்றன..
உண்மையாக இருங்கள் ..
நல்ல நோக்கம் கொண்ட எண்ணங்களோடு இருந்து,
மற்றவர்களுக்காகவும் நல்லது எண்ணுங்கள்..
தெய்வீக சக்தியோடு நம்மால் எவ்வளவுக்கு எவ்வளவு நெருங்கி இருக்க முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு உறுதியானவராக மாறும் சக்தியை விரைவில் நாம் அடைகிறோம்...
பிரபஞ்சத்திற்கு நன்றிகள்..
வாழ்க வளமுடன்.
#உண்மை #வலிமை #சக்தி #பிரார்த்தனை #தெய்வீகம்
#truth #strength #power #prayer #divine
No comments