ஏன் நம்மை நாமே புரிந்து கொள்ள வேண்டும்?Self Understanding ஏன் உதவுகிறது?
சுய புரிதல் Self Understanding எவ்வாறு மற்றவர்களை நன்கு புரிந்துகொள்ள உதவுகிறது?
சுய புரிதல் (Self-Understanding) என்பது வெளிப்புற தாக்கங்களிலிருந்து பிரித்து, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள நம் உள் மனசாட்சியுடன் நம்மை இணைத்துக் கொள்ளல் என்பதாகும்.
உங்களை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தனித்துவமானவர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் பொருட்டு தனிப்பட்ட பலங்களும் பலவீனங்களும் உள்ளன. எனவே நீங்கள் பிறர் நியாயங்களுக்கு தீர்ப்பு அளிப்பதையும் அவரின் செயலுக்கு முத்திரை குத்துவதையும் நிறுத்த முடியும்;
மாறாக, அவர்களையும் நம் நிலையில் பார்க்கவும், அவர்களின் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளவும் இயலும்.
பிரார்த்தனை செய்யுங்கள், தியானியுங்கள், அமைதியாக நேரத்தை செலவிடுங்கள்.
உங்களைப் புரிந்துகொள்வது என்பது பூமியில் உள்ள பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வது,
நாம் நம்மைச் சேகரித்து அடுத்ததாக உள்ள கட்டத்திற்குச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது, ஆனால் இதற்கு முதலில் நாம் மனதையும் உடலையும் திறந்திருக்க சில பல காலம் எடுத்துக் கொள்ளலாம்...
மற்றவர்களைக் கவனிக்கவும், ஏன் இப்படி நடந்து கொண்டிருந்திருப்பார் என்று யோசித்து பகுப்பாய்வு செய்யவும் மற்றும் புரிந்து கொள்ளவும் நாம் பழக வேண்டும்..
உங்களை அவர்களின் நிலையில் பொருத்திப் பார்த்து அவரது மனதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
நியாயமான, நேர்மறையான மற்றும் திறந்த மனதுடன் இருங்கள். இது மற்றவர்களைப் புரிந்துகொள்ளவும், சிறந்த புரிதலுடன், சிறந்த உறவுகளை உருவாக்கவும் உதவும் என்பது முற்றிலும் உண்மை....
நன்றிகள் பல...
#உறவுகள் #இணைப்புகள் #புரிதல்
#relationships #Connections #understanding
No comments