It hurts...but
இரக்கமற்ற வார்த்தைகள் கேட்கும் போது நீங்கள் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள்?
ஒருவர் நமக்கு வேண்டியவர் அவர்கள் இதயத்தில் எதை வைத்து பேசுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு அன்பான நபர் பல வேளைகளில் நம்மிடம் நம்பிக்கையை, நேர்மறை வார்த்தைகளை மற்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள்...
அதே சமயம் ஒரு சூழலின் காரணமாக அதே நபர் வலி, நம்பிக்கையின்மை மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மையை மனதில் சுமந்து கொண்டிருக்கிற காரணத்தால் தயங்காமல் நம்மைக் காயப்படுத்தி விடுகிறார்கள்..
சில சமயங்களில் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மைக் காயப்படுத்தும் அளவுக்கு கடுமையாக நடந்து இருக்கிறார்கள்.
அவர்கள் நம்மில் தவறுகளைக் கண்டுபிடித்து, நாம் செய்யும் அனைத்தையும் தேர்ந்தெடுத்து, நம்மை தகுதியற்றவர்களாக உணர வைக்க முயற்சிக்கிறார்கள்.
அவர்களின் நடத்தைக்கு பின்னால் உண்மையில் அவர்களின் சொந்த தோல்வி, வலி மற்றும் குறைபாடுகளின் அழுத்தம் உள்ளது, அதை அவர்கள் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை...
நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் ...
அன்பாக ஆனால் எச்சரிக்கையாக இருங்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க முடிந்தால், இடைவெளியை கடைபிடியுங்கள்.
உங்களால் முடியாவிட்டால், அவர்களைப் புறக்கணிக்கவும்.
உங்கள் செயலின் மீது வலுவாகவும், உங்களின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராகவும் இருங்கள், நீங்கள் அவர்களின் ரணங்களை குணமாக்க உதவலாம், உண்மையில் நம் நலம் விரும்பிகள் துவண்டு போய் இருந்தால், அப்படிப்பட்ட நேரத்தில் உங்கள் உதவிக் கரம் கொடுங்கள்.
ஏன் என்றால் மீண்டும் அவர்கள் மீது அதே வெறுப்பு நம்பிக்கையின்மை என்ற செயலை திருப்பிக் கொடுக்க நாம் அடிமைகள் இல்லை... நம் அமைதியும் மகிழ்ச்சியும் நம் சுதந்திரம் மட்டுமே..
நன்றி...
#இரக்கம் #மகிழ்ச்சி #காயம் #பாசிட்டிவிட்டி
No comments