நமக்கு நலம் தரும்

 உடல் குளிர உள்ளம் குளிர ஆன்மா குளிர...


உடல் சுகமாய் என்றும் இருக்க..
வள்ளுவரின் மருந்து என்னும் அதிகாரம் தரும் குறள்...


அற்றால் அறவறிந் துண்க அஃதுடம்பு

 பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.


முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.


என்ற திருவள்ளுவரின் குறள் உடல் நலம் காக்கும் வாக்காகும்...
இதை பின்பற்றுவோம்.



உள்ளக் களிப்பிற்கு 


பாரதியாரின் - சாகா வரம்


சாகா வரமருள்வாய், ராமா

சதுர்மறை நாதா-சரோஜ பாதா!


ஆகாசந் தீகால் நீர்மண்

அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்

ஏகா மிர்த மாகிய நின்தாள்

இணைசர ணென்றால் இதுமுடி யாதா?

(சாகா) 1


வாகார்தோள் வீரா, தீரா,

மன்மத ரூபா, வானவர் பூபா,

பாகார்மொழி சீதையின் மென்றோள்

பழகிய மார்பா! பதமலர் சார்பா (சாகா) 2


நித்யா, நிர்மலா, ராமா,

நிஷ்க ளங்கா, சர்வா, தாரா,

சத்யா, சநாதநா, ராமா,

சரணம், சரணம், சரண முதாரா!


(சாகா) 3


ஆன்ம நிம்மதிக்கு....


திருவாசகம் படித்து சிவனருள் பெறுவோம்..


நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5


பொருள்:


நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க.
கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க.
திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க.
தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில் வருபவனுடைய திருவடி வாழ்க.
ஒருவனாகியும் பலவுருக்கொண்டும் இருக்கும் இறைவனின் திருவடி வாழ்க.

நன்றிகளும் வாழ்த்துக்களும்...



No comments

Powered by Blogger.