நன்றி இப்போதே..
நன்றி சொல்ல சில நிமிடம்🙏
இருந்த இடத்தில் இருந்தே நல்லது செய்ய முடியும் என்றால் அது நம் எண்ணம் மூலம் சாத்தியம் தாங்க...
நாம யாருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம் என்று எண்ணி அவர்களுக்கு அந்த நன்றியை நம் மனதால் நினைத்து வாழ்த்தி கூறினாலே இந்த பிரபஞ்சம் அவர்களிடம் அதைக் கொண்டு சேர்த்து விடும் தானே..
எங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்கு என்று நாம் நினக்கிறோம் அல்லவா...தினம் ஒரு நிமிடம் முயற்சி செய்து பார்க்கலாம்.. மொபைலில் இப்போதைய நிமிடத்தில் இருந்து அடுத்த ஒரு நிமிடம் வரை எடுத்துக் கொள்வோம்.
🙏நம் உடலுக்கு நன்றி கூறலாம்..
🙏நம் மனதிற்கு நன்றிகூறலாம்.
🙏இறைவனுக்கு நன்றி சொல்லலாம்.
🙏தாய் தந்தைக்கு , ஆசிரியருக்கு, நண்பருக்கு, சகோதர, சகோதரிகளுக்கு, உறவினர்களுக்கு, இப்படி நெருங்கிய சொந்தங்களில் இருந்து அருகில் வீட்டில் இருப்போர், உடன் பணிபுரிவோர், என நம் நன்றி நீண்டு கொண்டே சென்று பிரபஞ்ச எல்லையைத் தொடவேண்டும். அப்போது ஆத்மநிம்மதி நமக்குக் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
இந்த நிமிடம் நமக்கு இருக்கும் மூச்சு நல்ல உடல் தந்த இயற்கை இது யாவும் வரம் அல்லவா...🤗
சந்தோசம் பெற்றிட பல காரணம் இருக்கிறது என்று அதை எண்ணி எண்ணி மனம் மகிழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்... ஏன் என்றால் நாம் அழுது புலம்பவோ, கவலையில் புதைந்து போகவோ பிறப்பு எடுக்கவில்லை.
நம் பிரச்சனை தீரக்கூடியது என்று நிதர்சனமான நம்பிக்கை கொள்வோம். நாம் கடந்து வந்த பாதையைவிட இது ஒன்றும் பெரிய மலை அல்ல. இன்பமாய் இருக்க எப்போதும் முயன்று கொண்டே இருப்போம்...
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
வாழ்க வையகம் ⚛️🤚
வாழ்க வளமுடன் 🔯🤚
No comments