Reels la relax a படிங்க..சிந்து சமவெளி நாகரிகம் Hints ||Tricks ||memes

 

சிந்து சமவெளி நாகரிகம் ......


6 th Std Term 1 - Page 132

         

     🤗தொடக்கத்தில் மனிதர்கள் குழுக்களாக 

வாழ்ந்தார்கள். அக்குழுக்களில் இருந்து 

சமுதாயங்கள் உருவாகின. பின் அவை

சமூகங்களாக வளர்ந்து காலப்போக்கில் 

நாகரிகங்களாயின.



 கீழ்வரும் அனைத்து நாகரிகங்களும் நதிக் கரை நாகரிகங்கள் ஆகும்..



🤗மக்கள்ஏன் நதிக்கரையில்குடியேறினர்?


மனிதர்கள் தங்கள் குடியேற்றங்களாக நதிக் கரைகளைக் கீழ்க்கண்ட காரணங்களுக்காகத் 

தேர்ந்தெடுத்தார்கள்.


வளமான மண்

 ஆறுகளில் பாயும் நன்னீர் குடிப்பதற்கும் 

கால்நடைகளின் தேவைகளுக்கும், 

நீர்ப்பாசனத்திற்கும் பயன்பட்டன.

 போக்குவரத்துக்கு ஏற்ற வழிகளாக 

இருந்தன.



🤗ஹரப்பா - புதையுண்ட நகரம்

ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை

முதன்முதலில் சார்லஸ் மேசன் என்ற

ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.



🤗அவர் கிழக்கிந்தியக் 

க ம்பெ னி யி ல் 

பணிபுரிந்த படைவீரரும், 

ஆராய்ச்சியாளரு ம் 

ஆவார். அவர் தற்போது 

பாகிஸ்தா னி ல் 

உள்ள இந்தியாவின் 

வடமேற்கு பகுதியைப் 

பார்வையிட்டபோது சில

செங்கல் திட்டுகள் இருப்பதைக் கண்டார்.




Tips 😁

 அங்க போய் நீ..🤗ஆணியவே புடுங்க வேணாம் டா..

“அந்தப் பாழடைந்த செங்கற்கோட்டை

உயரமான சுவர்களுடனும், கோபுரங்களுடனும் 

ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது” எனக் 

குறிப்பிட்டார். இதுதான் ஹரப்பா இருந்ததற்கான

முதல் வரலாற்றுச் சான்று ஆகும் . 


கி.பி (பொ.ஆ) 1856 - இல் பொறியாளர்கள் 

லாகூரில் இருந்து கராச்சிக்கு இரயில் பாதை

அமைக்கும் பொருட்டு நிலத்தைத் தோண்டிய

பொழுது அதிகமான சுட்ட செங்கற்கள் 

கண்டறியப்பட்டன. அவர்கள் அவற்றின் 

முக்கியத்துவத்தை உணராமல், அவற்றை

இரயில் பாதைக்கு இடையில் போடப்படும் 

கற்களுக்குப் பதிலாக பயன்படுத்தினர்.


Tips 😁
லாக் டவுன் ல காரசேவு வாங்க 5 to 6 மணிக்கே போனும்..night 8 மணிக்கு போனா செங்கல் கூட கெடைக்காது..

லாகூர்  கராச்சி. 1856



படித்து பயன் பெற மட்டுமே... மற்றும் மனதில் பதிய வைக்க எளிய வழிமுறைகள்.. தங்களின் சொந்த எண்ணங்களுக்கு ஏற்ப நீங்கள் குறிப்புகள் எடுத்து நினைவில் கொள்ளுங்கள்...

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்..

மீண்டும் சந்திப்போம்.....

Next 



No comments

Powered by Blogger.