Short a படிங்க...10th Tamil Guide Chapter 5.3 திருவிளையாடற் புராணம்


இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தை நாடக வடிவில்...

10th Tamil Guide Chapter 5.3

 திருவிளையாடற் புராணம் 

இடைக்காடனார் : மன்னா, வாழ்க! நான் கபிலனின் நண்பன். நான் இயற்றிய பாடலை உங்கள் முன் பாட விரும்புகின்றேன்.

குலேசபாண்டியன் : (கர்வத்தோடும்) பாடும். (இடைக்காடனார் பாடலைப் பாடுகின்றார்)

இடைக்காடனார் : (இறைவனிடம் முறையிடல்) இறைவா! பாண்டியன் என் பாடலைப் பொருட்படுத்தாமல் உம்மையும் பார்வதிதேவியையும் அவமதித்தான்.

இறைவன் : கபிலருக்காகவும் இடைக்காடனாருக்காகவும், இந்தக் கோவிலை விட்டுச் செல்கின்றேன். (இறைவன் கோவிலை விட்டு வெளியேறல்)

குலேசபாண்டியன் : இறைவனே! என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? வேதங்களைப் பயின்றவர் நல்லொழுக்கத்தில் தவறினாரா? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியேன்.

இறைவன் : இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் இல்லை. இடைக்காடனார் மீது கொண்ட அன்பால் இங்கு வந்தோம்.



குலேசபாண்டியன் : பார்வதிதேவியை ஒரு பாகத்தில் கொண்ட பரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா? என் குற்றத்தைப் பொறுக்க.

(புலவர்களை ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர வைத்தல்)

குலேசபாண்டியன் : புலவர்களே என்னை மன்னியும். இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுக்க .

கபிலர் மற்றும் இடைக்காடனார் : மன்னா! நீர் கூறிய அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது

Start Test 1

https://www.pencilmaths360.in/2023/08/10th-tamil-book-back-qn-ans-test-1.html


Tips உடன் படித்து டெஸ்ட் எழுதுங்க...👍🔗👆

நன்றி...


.

No comments

Powered by Blogger.