என் தவறு இல்லை!!This is not my mistake

நம்ம ஏன் கோபப்படுகிறோம்?


    நமது இயலாமையினால் தான்(Because of weakness)...


 Strong ஆன நபர் காட்டுற கோபம் ஆழமானது அழகானதும் கூட ...


மனதளவில் ஸ்ட்ராங் செயல் புரிகிற திறமையில் ஸ்ட்ராங்... இப்படி நிறைய பெருமை அடைந்து நல்ல ஸ்டேட்டஸ்ல இருக்கிறவங்க தன்னப்போல இருக்கிறவங்க நம்மள போல முன்னேறனும் அப்படிங்கிற நோக்கத்துல அவங்க கிட்ட காட்டுற அக்கறை கோபமாக வரலாம்..


பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளிடம் , ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடம், சக நண்பனிடம் நாம் காட்டும் கோபம் எல்லாம் இந்த உரிமையிலான கோபம் தான்....


ஆனால் நாம் நம்மிடமே எரிந்து எரிந்து விழுகிறோம் இல்லையா!


 முணுமுணுத்துக் கொண்டே நம் வாழ்க்கையை மேல் கோபம் கொள்கிறோம் இல்லையா!


 இது எல்லாம் தான் வீண் கோபம்... புலம்பியும், நொந்து கொண்டும் கடந்து செல்லும் இந்த நாட்கள் தான் எத்தனை எத்தனை?


சின்ன சின்ன விஷயங்களில் நாம் நம் மேல் கொண்டுள்ள வெறுப்பே, அதை நமக்குத் தெரியாமல் மற்றவர் மேல் கோபமாக உமிழ்கிறோம். நம்முடன் பயணிக்கும் அந்த நபரும் இதே தவறை தான் நம் மீது காட்டுகிறார்.


எப்போது முழித்துக் கொள்ள வேண்டும்?




 நாமே நம்மை நினைத்து நொந்து கொள்ளும் சில விஷயங்கள் பிறரின் வாயிலிருந்து குறையாக வெளிப்படும்போது, நமக்கு உச்சகட்ட கோபம் வரும் ..


அதற்கு காரணம் அவர் நம்மை குறை கூறுவதால் நமக்கு வந்ததல்ல.. அந்தக் குறையை இன்னும் நம்மால் சரி செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும், ஆதங்கமும் தான்!


நாமும் பதிலுக்கு சண்டையிடுகிறோம், கண்ணீர் விடுகிறோம், அந்த உறவு முக்கியம் எனில் மீண்டும் இணைகிறோம் .

ஆனால் அந்தக் குறை!!!


ஏன் நாம் அதை மாற்ற முயற்சி எடுக்கவில்லை??

 காரணம்... நம் உறவை மீண்டும் மீட்டெடுத்த பின், குறையை அவரும் ஏற்றுக்கொண்டு விட்டார் என்ற மெத்தனம் வந்துவிடுகிறது... மீண்டும் தவறு தொடர்கிறது..! அடுத்த சிக்கல் வரும்வரை!!


அப்படியெனில் நாம் செய்ய வேண்டியது என்ன? 


சுறுசுறுப்புடன் நம் குறையை நிறையாக்குவது!!


  • முதல் தேவை

  • - சுறுசுறுப்பு 
  • -சுய காதல் self-love
  • & சுய மதிப்பு self-respect 


இவ்வளவையும் மனசுல வச்சுக்கிட்டு தான் நீ என்ட்ட பழகுனியான்னு நம்ம கேட்க வேண்டாம்?? பதிலுக்கு அவரோட குறையை குத்தி காமிச்சு சண்டையிட வேண்டாம்.. நாம் நம்மை நேசிப்போம். நம்மை மதிப்பு மிக்கவராய், பெருமையுடையவராய், உயர்த்தி காட்டும் செயல்களில் காரியங்களில் ஈடுபடுவோம்..


Self Respect is the best respect 🙂


அவரிடம் மரியாதையை எதிர்பார்ப்பதை விட நாம் நம் மதிப்பைக் கூட்டும் திறமையான செயல்களில் ஈடுபடுவது,🚵 இனிமையான நினைவுகளை உண்டாக்குவது🪂, நமது பொழுதுபோக்குகளை🎉 அர்த்தமுள்ளதாக்குவது💲 போன்றவற்றில் ஈடுபட்டால் நிச்சயமாக உற்சாகமான அழகான நாட்கள் தினம் தினம் நம் வாழ்க்கையில் வந்து சேரும்.👍💕


 வாழ்க வையகம்...🙌

 வாழ்க வளமுடன்...🤚




 

No comments

Powered by Blogger.