Tamil Memes || Old question Preperation|| School book

6th Std தமிழ் புத்தகம்...

TNPSC TAMIL SHORT CUTS.. Tricks

நூல், ஆசிரியர், முக்கியமான மேற்கோள்கள் மற்றும் குறிப்புகள்.....



தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் எனப்படுகிறார். பல பெரும்புலவர்களின் வரலாறு சரிவர அறியப்படாதவாறு இவர் வரலாறும் அறியப்படவில்லை. தொன்மையான காப்பியக்குடி என்னும் ஊரினர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்பர் ஒரு சாரார். தஞ்சை மாவட்டத்தில் சீகாழிப்பகுதியில் உள்ள காப்பியக் குடியை மேற்கோள் காட்டுவர் ஒரு சாரார். காவிய கோத்திரத்தைச் சார்ந்த பிராமணராக இவரைக் கருதுவாரும் உண்டு. தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூலை இயற்றியமையால் இவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர்.



பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களை, தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.




நற்றிணைப் பாடல்கள் அகப்பாடல்களாக இருப்பினும், அவற்றில் புறத்தின் கூறுகளாக மன்னர்கள், வள்ளல்கள், வீரர்கள் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளதால், காதலுடன் வீரமும் கலந்த கவிச்சுவை சிறப்பின் சிகரமாகிறது. அவர்கள் யாவரும் தம் நாட்டு மக்களுக்காக, எதிரி நாட்டுடன் போர் புரிந்து பொன், பொருள் எனப் பல பொருட்களைக் கைப்பற்றி ஏழை, எளியவர் களுக்குக் கொடையாகக் கொடுத்துத் தன் நாட்டையும், தம் மக்களையும் செழுமையுடனும், செம்மாந்த வளமையுடனும் வைத்திருந்தார்கள் என்பதைப் பாடல்களின் வாயிலாக நமக்குச் சொல்லித் தருகிறார்கள் புலவர் பெருமக்கள்.


பதிற்றுப்பத்து பத்துச் சேர அரசர்கள் பற்றிப் புகழ்ந்து பாடுகிறது என்பதைக் கூறுகிறது. பதிற்றுப்பத்து கூறும் சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு ஆகியவற்றை விளக்குகிறது. சேர மன்னர்களின் பண்பு நலன்களை விவரிக்கிறது. அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது..




புலவர் பாடல்கள்
திருக்குறளுக்குப் பெருமை சேர்க்க விரும்பிய ஒரு சிறந்த புலவர் சங்க காலப் புலவர்கள் சிலரது பெயரில்
பாடல்கள் எழுதித் தொகுத்துத் தந்த நூலே திருவள்ளுவ மாலை எனபதை ஊன்றெண்ணிப் பார்த்துப்
படிப்போர் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும்.
இவர்கள் திருக்குறளைப் பெரிதும் மதித்துப் போற்றிச் சூட்டியுள்ள புகழாரங்களைத்
திருக்குறளுக்குப் புகழாரம் என்னும் பகுதியில் காணலாம்.

மேலும் இணைந்து இருக்க


No comments

Powered by Blogger.