12th தாவரவியல் முக்கியமான புத்தகத்துக்கு உள்ளே இருந்து வரும் ஒரு மதிப்பெண் வினாக்கள்

 12th தாவரவியல் கூடுதல் ஒரு மதிப்பெண் வினா விடைகள்


 12th Botany additional Extra Creative one words in tamil 


 12th தாவரவியல் முக்கியமான புத்தகத்துக்கு உள்ளே இருந்து வரும் ஒரு மதிப்பெண் வினாக்கள் 


12th Biology important one words in tamil



 1) "அன் இன்ட்ரொடக்சன் டு தி எம்ப்ராலஜி ஆப் ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் "(An introduction to the Embryology of Angiosperms) என்ற புத்தகத்தை வெளியிட்டவர்?


 * பேராசிரியர் பஞ்சனன் மகேஸ்வரி (1950 ம் ஆண்டு)

 2) "வங்கத்தின் அச்சுறுத்தல்" என்று அழைக்கப்படும் தாவரம்??


 * நீர் ஹையாசிந்த் ( ஐ கார்னியா கிராசிப்பஸ் )


3) மகரந்த துகள்களை நீண்ட காலம் உயிர்ப்பு தன்மையுடன் பாதுகாக்க உதவுவது எது?


 * திரவநைட்ரஜன் 

 4) அந்துப்பூச்சியின் அறிவியல் பெயர் ???


 * டெஜிகுலா யூக்காசெல்லா 

 5) ஆர்கிட் விதையின் எடை? ?


 * 20.33 மைக்ரோகிராம்

 6) இரட்டைத் தென்னை விதையின் எடை? ?


 * ஏறத்தாழ 6 கிலோ கிராம் 

 7) சில உயிரினங்களில் உள்ள குரோமோசமங்களின் எண்ணிக்கை(2n) .....


 ஆடர் நாக்கு பெரணி - 1262

 குதிரைவால் பெரணி - 216

 மிகப்பெரிய சைகொயா - 22

 அராபிடாப்சிஸ் - 10

 கரும்பு - 80 

 ஆப்பிள் - 34

 அரிசி - 24

 உருளைக்கிழங்கு - 48

 மக்காச்சோளம் - 20

 வெங்காயம் - 16 
ஹேப்லோபாப்பஸ் கிரேசஹிலி ஸ் - 4

8) கடுகு வாயு என அழைக்கப்படும் வாயு எது ?


 * டைகுளோரோ எத்தில் சல்பைடு 

9) சூழ்நிலையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?


 * அலெக்சாண்டர் வான் அம்போல்ட்

 10) தற்காலச் சூழ்நிலையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?


 * யூஜின் P . ஓடம்

11)" இந்திய சூழ்நிலையின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார் ?

 
 * R. மிஸ்ரா


12) சூரிய அஸ்தமனம்( 5 - 6 மணி) பொழுதில் மலரும் தாவரம் எது?


 * ப்ரைம் ரோஸ் 

 13) சூழ்நிலையியலில் முக்கிய தினங்கள் ;;


 மார்ச் 21 - உலக வன தினம்

 ஏப்ரல் 22 - புவி தினம் 

 மே 22 - உலக உயிரி பன்ம தினம் 

 ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம்

 ஜூலை 7 - வன மகோற்சவ தினம் 

 செப்டம்பர் 16 - அகில உலக ஓசோன் தினம்


14) கார்பனின் வகைகள் ;

 * பசுமை கார்பன் - ஒளிச்சேர்க்கை செயல் மூலம் உயிர்க்கோளத்தில் சேமிக்கப்படும் கார்பன்

 * நீல கார்பன் - வளிமண்டலம் மற்றும் கடல்களில் சேமிக்கப்படும் கார்பன்

 * பழுப்பு கார்பன் - வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் மரங்களால் தொழில் ரீதியாக உருவாக்கப்படும் காடுகளில் சேமிக்கப்படும் கார்பன்

 * கருமை கார்பன் - வாயு, டீசல் இன்ஜின், நிலக்கரியை பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள், ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கார்பன் .

15)" Trophic " - என்ற கிரேக்க சொல்லின் பொருள் யாது? 

 * உணவு அல்லது உட்டமளித்தல் 

 16) இந்தியாவின் வன மனிதன் என அழைக்கப்படுபவர் யார்?

 * ஜாதவ் மோலாய் பயேங்

 17) சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி யார்?? 

 * Dr.M.S சுவாமிநாதன்

 18). உலகின் முதல் கலப்பின சோளத்தை உருவாக்கியவர் யார்?  

 * N.G.P ராவ்

19 ) "கலப்பின பருத்தியின் தந்தை " என அழைக்கப்படுபவர் யார்?  

 * C.T படேல் 

 20) C 591 கோதுமை ரகத்தை உருவாக்கியவர் யார்?

 * எ.சவுத்ரி ராம் தன் 

 21) "காமத் தோட்டம்" அமைய பயன்படுவது? ?

 * கோபால்ட் 60 அல்லது சீசியம் 137 கதிர்வீச்சுகள்

 22) நோரின் 10 ரகத்திற்கு எடுத்துக்காட்டு ??

 * அரைக்குட்டை கோதுமை ரகம்

 23) "பொய் தானியம்" (Pseudocereal) என அழைக்கப்படுவது ?

 * கீனோபோடியம் கினோவா

24) "நறுமணப்பொருட்களின் அரசி" என அழைக்கப்படுவது எது ?

 * ஏலக்காய்

....To be continued.......

 25) "நறுமணப்பொருட்களின் அரசன் " அல்லது " இந்தியாவின் கருந்தங்கம்" என அழைக்கப்படுவது எது ??

  * மிளகு

 26) "Sterilization " என்ற வார்த்தையின் தமிழாக்கம்? ??

  * நுண்ணுயிர் பெருக்கம்
 

No comments

Powered by Blogger.