மழைக்காலங்களில் கொடுக்கப்படும் எச்சரிக்கைகள் .........
மழைக்காலங்களில் மூன்று விதமான எச்சரிக்கைகள் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்படுகிறது ....
அவைகள்......
* மஞ்சள் எச்சரிக்கை (Yellow alert )
* ஆரஞ்சு எச்சரிக்கை (orange alert)
* சிகப்பு எச்சரிக்கை (Red alert)
போன்றவைகளாகும்..
இவைகள் என்னென்ன என்பதை பற்றி விவரமாக பார்ப்போம் ...
மஞ்சள் எச்சரிக்கை ( Yellow alert):
* இது ஒரு கன மழை எச்சரிக்கையாகும்..
இந்த எச்சரிக்கை விடப்பட்ட
பகுதிகளில் மழையானது ஒரு
நாளைக்கு 7 சென்டிமீட்டர் முதல் 11
சென்டிமீட்டர் வரை இருக்கும் ....
ஆரஞ்சு எச்சரிக்கை ( orange alert) :
* இது ஒரு மிக கனமழை எச்சரிக்கையாகும் ...
இந்த மழை எச்சரிக்கை விடப்பட்ட பகுதிகளில் சுமார் 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை பெய்கிறது ..
சிகப்பு எச்சரிக்கை ( Red alert):
* இது ஒரு அதி தீவிர மிக மிக கனமழையாகும் ....
இந்த மழை எச்சரிக்கை விடப்பட்ட இடங்களில் 21 செண்டி மீட்டருக்கு மேல் பெய்கிறது...
21 சென்டிமீட்டருக்கு மேல் எவ்வளவு மழை பெய்தாலும் அது சிகப்பு எச்சரிக்கை என எடுத்துக் கொள்ளப்படுகிறது ....
* இந்த எச்சரிக்கைகளில் எது விடப்பட்டாலும் நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது ...
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
* முன்கூட்டியே தூர்வாருதல்,
மேடான பகுதிக்கு செல்லுதல்,
...வெளியில் அவசியம் இன்றி செல்லாமல் இருத்தல்,
...முன்னெச்சரிக்கையாக உணவுப் பொருட்கள் மற்றும் அவசியமான பொருட்களை இருப்பு வைத்தல்...
போன்றவைகளை மழைக் காலங்களில் கடைப்பிடிப்பது நல்லது ...
* மழை வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்று ஆபத்தில் சிக்காமல் இருப்பது நல்லது ...
நன்றி....
No comments