இல்லறம் சிறக்க - 1 தோழி ஆலோசனை
தவறை தன்னுடையதாய் ஏற்றுக் கொள்ளுங்கள்..🙏🙏🙏
தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்..💯💯
நம்மிடம் இருக்கும் குறைகளை தன் இணை சுட்டிக்காட்டும் போது அவரை முழுமையாக நம்புங்கள்..🫂
காதலோடு அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.. 💖
எப்படி இதை சாத்தியப்படுத்துவது??!💥
அவர் நம்மை கோபப்படும்போது முதலில் கோபமும், எரிச்சலும் வெறுப்பும் தானே நம்மிடம் தோன்றுகிறது... 👿பிறகு எப்படி காதல், கீதல் எல்லாம்!!??🌝
முதலில் நாம் அமைதி அடைய வேண்டும்..✨
பின் மௌனம் பழக வேண்டும்..🌸
நிதானம் கொள்ள வேண்டும்...🌺 எதிர்மறை சிந்தனைகளை மாற்ற வேண்டும்...🌷
நல்ல நோக்கத்திற்காக நம் மீது பிறர் கூறும் அறிவுரைகளிலோ இல்லை கோபத்திலோ உள்ள அக்கறையை புரிந்து கொள்ள வேண்டும்...🌻
அதில் மறைமுகமாக அவருடைய தேவையும், ஆசையும் கெஞ்சி நிற்கிறது...👫
அவர் சொல்லும் குரலும், வெளிப்படுத்தும் விதமும் பெரிதாக இருக்கலாம், ஆனால் அதன் தேவை👩❤️💋👨 உண்மையானது...
வாக்குவாதங்களோ, வீண் பேச்சுகளோ, வெறுப்போ, வளரும்போது மௌனம் கடைபிடியுங்கள்...🤺
ஆனால் அந்த மௌனத்தில் தங்கள் இணையின் மீதான நேசம் வளரட்டும்...🧘
தவறு அவருடையதோ நம்முடையதோ தயங்காமல் தன் தவறாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை உங்களுக்கு வர பழகிவிட்டால் நீங்கள் அன்பின் கதவுகளை திறக்க பழகிக் கொண்டீர்கள் என்று அர்த்தம்..🙏🫶
பிறகு என்ன பொறுமை தரும் கனியோ சுவை மிக்கது...🙌
இதற்கு நேர் மாறாக அமைதி அடைய வேண்டிய சமயத்தில் காழ்ப்புணர்ச்சி, அவர் மீது வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் என்பது வளர்ந்தால் அங்கு காதலுக்கும் புரிதலுக்கும் இடமில்லை...👎
விளைவு இடைவெளி அதிகமாகி நெருக்கம் தாமதமாகும்...🤛
விழித்துக் கொள்ளுங்கள்!!!👍
இதயங்களே நமக்கு தேவை காதல்...💞
அதில் கௌரவத்திற்கும், விதண்டாவாதத்திற்கும் என்ன வேலை இருக்கிறது.❤️😻
நம்மை இப்படி சொல்லிவிட்டாரே அவர் அதில் அப்படி என்ன ஒழுக்கம்?! என்று எண்ண வேண்டாம்... அவர் தன் தவறை உணர்ந்ததால் தான் தன்னை போல இருக்கும் உங்களிடமும் அதே தவறு இருப்பதை களைய விரும்புகிறார் அவ்வளவே!. 🙈🙉🙊
நீங்கள் உங்கள் தவறை ஆராய்ந்து களைய முதல் முயற்சியை எடுங்கள்...💗 காலத்துக்கும் அதை பின்பற்றுங்கள்...🫂
உங்கள் வழியில் அவரும் வருவார்....🫶
மனதை கோவிலாக்குங்கள்..🌸🌸🌸
இல்லம் தெய்வீகமாகும்...💗💗💗
நன்றி...🫶
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது..
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
No comments