இல்லற ரகசியம் ❤️2 பிரியமான தோழியின் ஆலோசனைக் கட்டுரை

 Personal Talks.


பெண்களே ! நீங்கள் தெய்வீகமானவர்கள். 

பெண் மனம் என்பது எதையும் எளிதாக நம்பக் கூடியது.


நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம் மீது காட்டும் உண்மையான அன்பை நம் மனம் பெரிதும் கொண்டாடும். சின்ன சின்னப் பாராட்டுகளுக்கு பெண் மனம் ஏங்கும் .


பிறந்த வீட்டில் ரசம் வைத்தாலே, பிரியாணி செய்து விட்ட மாதிரி பாராட்டுகளை வாங்கி little Princess ஆக வளர்ந்த நாம், புகுந்த வீட்டில் வழக்கமான சுவையான சமையல் செய்யும் போது, அதற்கும் மேலான பாராட்டினைப் பெற விரும்புகிறோம்.. 




அப்பாவின் கைகளில் இருந்த வைரம் இன்று கணவர் என்ற மணிமகுடத்தில் கிரீடமாய் ஜொலிக்க நாம் வந்து விட்டோம்...


இனிமேல் கீரீடத்திற்கு பெருமைசேர்க்கும் வேலையே,

நம் வாழ்நாள் சாதனை .... 


தாய் வீடு கோவில் தான்... அது எப்படி நடந்தது ?! அந்த வீட்டை கோவிலாக்கினாள் நம் தாய் என்னும் உலகஅன்னை!!!


நாம் நம் வீட்டை அதாவது, நம் புகுந்த வீட்டைக் கோவிலாக்கிக் கொண்டிருக்கிறோமா என்று சிந்திக்க -வேண்டும் தோழிகளே !! தாய்மார்களே!


மகளாய் இருந்து கொஞ்சி விளையாடி ,


மனைவியாய் இல்லறம் சிறக்க செய்த நாம்,


தாயாய் இருந்து தவம் புரியும் நிலையை அடைந்தும் விட்டோம் ..





தாய்மை அடைந்த முழுமையான பெண் மனம், தனக்கு எத்தனை பிள்ளைகள் பிறந்தாலும், இயல்பில் இன்னும் குழந்தையாகவே இருப்பதே நம் பெண்மையின் விந்தை...



நாம் பிறருக்கு 

பாராட்டையும்,

அன்பையும்,

அரவணைப்பையும்,

அக்கறையையும்,

கொடுக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டோம் என்பதையே, நாம்‌ அவ்வப்போது மறந்து விட்டு, குழந்தையாய் மட்டுமே அன்பிற்கும் பாராட்டிற்கும் ஏங்கியே நிற்கின்றோம்...


நம் குழந்தை மனம் இன்னும் தந்தையின் அன்பு தந்த சுகத்திற்கே ஏங்கி நிற்கிறது...எந்த பெண்ணிற்கும் தந்தையின் அன்பை நிகர் செய்யும் ஆணின் அன்பு வேறு எந்த ரூபத்திலுமாவது முழுமை பெறுமா என்ற ஏக்கம் தான் 

நாம் நம் கணவனின் கண்களிடமும்,

பிள்ளையின் வார்தைகளிடமும்,

எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம் ....


அந்த அன்பு தன்னிகர் அற்றது...


தகப்பன் தகப்பன் தான்...





நாம் அவரிடம் மட்டுமே எந்த வயதிலும் மழழையாகவே வலம் வர வைக்கும் மெய்யன்பைப் பொழிந்தவன்...

அவன் நம் வாழ்நாள் நாயகன்...

அவன் நம் வாழ்வின் ஒவ்வொரு மூச்சிலும் நம்மை இயக்கும் நம்பிக்கை ஊற்று...


நிகழ்காலத்தில் நம் அன்னையின் பொறுப்பை நாம் பெறும் காலகட்டம் இது...


எத்தனை பொறுப்பு அவளுக்கு இருந்தது..எவ்வளவு சாகசத்தை அசாத்தியமாய் புரிந்து இருக்கிறாள்... துச்சமாக எத்தனை இன்னல்களை கடந்து வந்து இருக்கிறாள்...

அவளை நாம் இவ்வளவு போற்றி இருக்கிறோமா??

நம் எந்த பாராட்டலும் இன்றியே அவள் நம் இல்லத்தை சொர்க்கமாக்கிய தேவதை...




நம்மை நம் கணவர் கையில் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார் தந்தை... இளவரசியாய் தாய் வீட்டில் இருந்த மகள்,தேவதையாய் புகுந்த வீட்டின் புகழ் சேர்க்க வேண்டிய மிகப் பெரிய தாய்மை என்னும் பொறுப்புகளில் நம்மை கால சக்கரம் இயக்கிக் கொண்டிருக்கிறது..


ஆக, நாம் நம் தாய் வழி வந்த 

கற்புடனும், பெருமையுடனும், வாழ்ந்து 

நம் கணவனின் பெருமைகளை வளர்த்து,

அவர் புகழ் பாடி,

அவரை உயர்த்தி,

இன்னும் இன்னும் அவரின் ஆயுள் நீள வேண்டி,

அவரை நம் குழந்தையாய் நேசம் அளித்து, 

வாழ்நாள் முழுக்க நம் காதலால் நனைத்து, 

அவரின் மனம் கவர் மங்கையாய் மண்ணில் மறையும் நிலை வரை‌ வலம் வந்து உன்னத தவம் புரிந்து கொண்டு இருக்கிறோம்...




அன்பு தோழிகளே...

உங்களைத் தலை வணங்குகிறேன்...

உன் தாய்மையைப் போற்றுகிறேன்....

உன் பணிகளை நான்

கொண்டாடுகிறேன்...

நீதான் எத்தனை எத்தனை அன்பு மிக்கவள்...

குழந்தை மனம் இருந்தும் தாயாய் பணி செய்யும் உன்னை நான் மதிக்கிறேன்..

உன் குடும்பத்தில் உன் உண்மை அக்கறையைப் பாராட்டுகிறேன் தோழி!!!!

அன்புத் தோழி....

உன் உண்மைத் தோழிகளை இனம் கண்டு கொள்...

அவளிடம் உன் அன்னை மடியையும் உன் தந்தையின் அருகாமையில் உள்ள சுகம் போன்ற ஆறுதலையும் கொஞ்சம்‌ நீ அடைவாய்....

ஆனால் கணவன் என்ற பொக்கிசமே, இத்தனை இன்பங்கள் நீ அடைய நம் ஆயுளைப் பூர்த்தி அடையச் செய்ய இறைவன் அருளால் வந்த வரம்...


உன் தாய் அன்பால் நீ உன் இல்லத்தை 

சொர்க்கமாக்கு!!!

நீயே தேவியின் உருவம்... உன்னால் கொடுக்க மட்டுமே முடியும்!!!

நீ வரம் தர இந்த உலகிற்கு வந்தவள் ...

உன் தேவனின் தேவி நீ..

அழகான தேவலோகம் உன் இல்லம்...

எனவே தாயே நீ இனி ஏங்காதே!! கலங்காதே!!தவிக்காதே!!!!

உன் இல்லற தவத்தை நீ புரிந்து கொண்டே இரு...

மூவுலகங்களும் உன் இல்லத்திற்கு அன்பு ஆசீர்வாதங்களை பொழிந்த வண்ணம் இருப்பார்கள்...நம் குழந்தைகள் நம்மால் புண்ணியம் அடைய நாம் அன்னையாய் தந்தையாய் தர்ம வேள்விகள் இன்னும் பல செய்ய வேண்டும்...




நீயே சக்தி... நீயே சரஸ்வதி... நீயே லட்சுமி....

தாயே உன் இல்லம் தெய்வீகம் ஆகட்டும்...

பாராட்டைக் கொடுக்கும் 

அன்பைக் கொடுக்கும் 

உன் உன்னத தாய்மைக்கும்,

பெண்மைக்கும் 

தலைவணக்கம் சகி...

சிங்கப் பெண்ணே நன்றி...



உன் இல்லறம் நல்லறமாக சிறக்க

 தோழியாய் பாதம் பணிந்த

 மரியாதைகளும், அன்பும் வாழ்த்துகளும்

 என் இனிய தோழியே!!!


இப்படிக்கு உயிர்த் தோழி....



No comments

Powered by Blogger.