காத்து வாக்குல ரெண்டு கதை🍿🎬 - 1 (உதவி)
கருத்து ஒண்ணு காமெடி ஒண்ணு -1 😂🫡
ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து போனார். வயதுக்கு வந்த மகன் குடும்பப் பொறுப்பு ஏற்றான். அப்பா இறந்த பிறகு அவரது டைரியில் இருந்த குறிப்பு ஒன்று சற்றே அதிர்ச்சி தந்தது.
அதில் நண்பரிடம் ஒரு லட்சம் கடனாக வாங்கியிருப்பதைத் தந்தை குறிப்பிட்டிருந்தார். அவர் கடன் வாங்கிய விபரம் குடும்பத்தில் யாருக்கும் தெரியவில்லை.
இறப்பின் போதும்,இறப்பிற்குப் பிறகும் கடன் கொடுத்த அந்த அப்பாவின் நண்பரை வேறு வேறு இடங்களில் சந்தித்து விட்டான். அவரும் இவனிடம் நலம் விசாரித்ததோடு சரி.
அவனது அப்பாவிடம் வழங்கியிருந்த கடன் குறித்து பேசாதது ஆச்சரியம் தந்தது. எனவே தந்தையின் நண்பரைத் தேடிச்சென்றான், சந்தித்தான், விவரம் சொன்னான்.
அவர் மெதுவாகச் சொன்னார்,"உங்க அப்பா எனக்குப் பல நேரங்களில் உதவியிருக்கிறார். அவர் ஒரு சமயத்துல உங்க அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கேட்டார். கொடுத்தேன்.
அதுக்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. திடீர்னு உங்கப்பா இறந்துட்டார்.
இந்த நிலையில் எந்த ஆதாரமும் இல்லாம, உங்கப்பா எங்கிட்ட கடன் வாங்கியிருக்காருன்னு கேட்குற மனம் எனக்கு வரல.
அதுக்கு முக்கிய காரணம், கடன் வாங்கும்போதே இது வீட்டிற்குத் தெரிய வேண்டாம்ன்னு சொன்னார்.
அவர் இறந்த பிறகும் அவர் வார்த்தைக்கு மதிப்பளிப்பதுதான் நியாயம்னு பட்டது. அதனால நானும் அதை விட்டுட்டேன்" என்றார்.
"எங்கப்பா கையெழுத்துப் போட்டு கடன் வாங்கலேனாலும்*அதைத் திரும்பக் கொடுக்குறது தான் அவரோட மகனுக்கு அடையாளமாக இருக்கும் என்ற மகன், கையோடு கொண்டு சென்றிருந்த பணத்தைத் திரும்பக் கொடுத்தான் நண்பர் நெகிழ்ந்தார்.
பண்பும் செயலும்தான் ஒருவனை உயர்த்தும். மதமோ சாதியோ,வசதியோ அல்ல.
இந்தச் சம்பவத்தில் இரண்டு நல்லவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
இதுதான் வழக்கு மொழியில் சொல்வார்கள்,
நல்லவர்களுக்கு எழுத்து தேவையில்லை; கெட்டவர்களுக்கு எழுதியும் பயனில்லை என்று..
🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.
"இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னுதெரியலை''
ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக் குனிய வைத்து
முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசுவெளியே வரவில்லை.
அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார்.பையனைத் தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.
எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
அந்தப் பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
"சார் நீங்க டாக்டருங்களா?''
"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா? '' :-
🙏🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀🙏🙏🙏🙏🙏🙏🙏
மீண்டும் சந்திப்போம்💚🙏
காத்து வாக்குல ரெண்டு கதை🍿🎬 - 2 (பணம்)
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
No comments