முழுதாய் தெரிந்து கொள்வோம் கச்சத் தீவை பற்றி👈👈
கச்சத்தீவின் தோற்றம்
ஆதித் தமிழனின் காலடி மண்ணே-
இலெமூரியாக் கண்டம்!
அதுவே -
மாந்தரின் மரபையும் மொழியையும் பண்பாட்டை யும் உருவாக்கிய தமிழ் இனத்தின் தாயகம்.
அதுவே-
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் இனத்தின் வாழ்விடம்.
காலத்தின் சுழற்சியால், கடற்கோள்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. கடற்கோள்கள் நிகழ்ந்த போதெல்லாம் தமிழர்கள் வாழ்ந்த இலெமூரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.
அதில் எஞ்சின முந்நீர்ப்பழந்தீவுகள் பன்னீராயிரம். அதில் ஒன்றே கச்சத்தீவு?
இத்தீவு கச்சை வடிவம் கொண்டது. எனவே இத்தீவுக்குக் "கச்சத் தீவு" எனப் பெயர் வந்தது. தமிழ்நாடு -தமிழ் ஈழம் இரண்டுக்கும் மையத்தில் இத்தீவு அமைந்தது.
கச்சத் தீவின் நீளம் 1கல். அகலம் கல். தீவின் பரப்பளவு 285 எக்கர். இத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ. நெடுந்திலிலிருந்து 28கி.மீ. இராமேசுவரத் திலிருந்து 18 கி.மீ. தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ. படகில் செல்லும் போது இராமேசுவரம் கோபுரம் மறைந்ததும் கச்சத் தீவு கண்களில் படும். இராமேசு வரத்திலிருந்து கச்சத் தீவுக்கு விசைப் படகுப் பயணம், இரண்டு மணி நேரம்!..
கச்சத்தீவின் புவியியல் அமைப்பு
இது முட்டை வடிவில் இருக்கும்.
கடலில் தக்கையென மிதக்கும்.
இத்தீவு, நெடுங்கோடு 79° 41' படுக்கைக் கோடு 9" 14' இவற்றின் சந்திப்பில் அமைந்துள்ளது. தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும். உட் பகுதியில் வெண்மணல் திட்டுகள் மிளிரும். ஆங்காங்கே குழிகளும் உண்டு.
பசும்புல் தரைகளும் உண்டு. நடுப் பகுதி கல்லுமலை என அழைக்கப்படும். கடல் மட்டத்திலிருந்து கல்லுமலை 20 அடி உயரம். அதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உண்டு, அதன் நீர், குடிப்பதற்கு நன்று! தொடர்ந்து கனமழை பொழியும். செடி, கொடி அகும்பும்.
கடல் பரப்பில் பறக்கும். சுருங்கச் சொன்னால்- கச்சத்தீவு தழ்கடல் ஒரு கணிச்சுரங்கம்! மீன் அரங்கம்!
கச்சத்தீவு, கடல் வாணிபத்தில், தமிழகத்தையும் தமிழ் ஈழத்தையும் பிணைத்தது. இரு நாட்டுத் தமிழர்களையும் இணைத்தது.
கச்சத்தீவில் இயற்கையின் அழகெல்லாம் காணலாம். பச்சை விரிப்பைப் பார்த்து மகிழலாம். ஓய்வுக்கும், மகிழ்வுக்கும் உகந்த இடம். இங்கே தங்கும் பயணிகளுக்கும் பூங்காற்றின் மணம் கிடைக்கும். ...
புனித அந்தோனியார் ஆலய திருவிழா பற்றி தெரியுமா?
இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.
ஆண்டுதோறும் இந்த ஆலயத் திருவிழா பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாள்கள் நடைபெறும்.
ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 23-ம் தேதி மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து, திருச்ஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பிப்ரவரி 24-ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்புத் திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்று, விழா நிறைவடையும் என இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இந்தத் திருவிழாவில் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்..
அதிகாலையிலேயே துறைமுகத்தில் குவியும் பக்தர்களிடம் மத்திய உளவுப் பிரிவான ஐ.பி., சுங்கத்துறையினர், மாநில வருவாய்த் துறையினர், மாநில உளவுப் பிரிவினர், துறைமுக போலீசார், கடலோர காவல்படையினர் ஆகியோர் தீவிர சோதனை நடத்தி, அவர்களிடம் உள்ள ஆவணங்களைப் பரிசோதனை செய்த பின்பு அனுப்புவர்..
ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை தலைமையில் பல படகுகளில் பக்தர்கள் கச்சத்தீவுக்கு அனுப்பி
வைக்கப்படுவர்...
இந்தத் திருவிழாவில் இரு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது வழக்கம். இதையொட்டி இலங்கையைச் சேர்ந்த பாதிரியார்கள் மற்றும் பக்தர்கள் மாலையே அங்கு வந்து விடுவர்...
கச்சத்தீவு செல்லும் வழியெங்கும் இந்தியக் கடலோரக் காவல்படையினர் ரோந்து கப்பல்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவர்.
கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் அனைவரும் விழாவிற்கு பின் ராமேஸ்வரம் திரும்புவார்கள். இலங்கைக் கடற்படையினரும் அவர்களது நாட்டு எல்லையில் தங்களது கப்பல்களைப் பாதுகாப்புக்கு நிறுத்தியிருப்பர்.
அதே போல இந்தியக் கடல் எல்லையில் இந்தியக் கடலோரக் காவல் படையினரும் இந்தியக் கடற்படையினரும் பல்வேறு கப்பல்களை நிறுத்தி வைப்பார்கள்.
இதற்கிடையே பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாட்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படும்...
இவ்வாறாக சிறப்பாக நடைபெறும் திருவிழா இந்த ஆண்டு ஏன் இல்லை?
கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு திருப்பயணமாக இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு யாரும் செல்லவில்லை என்பதை கச்சத்தீவு திருப்பயண குழு தெரிவித்துள்ளது.
மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் இந்தியாவில் இருந்து செல்லவிருந்த பயண முடிவை ரத்து செய்துள்ளது திருப்பயணக்குழு.
நன்றி...
மேலும் தகவல் பல அறிந்து கொள்வோம்..
கச்சத்தீவு திருவிழா,
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா,
கச்சத்தீவு திருவிழா 2024 date,
No comments