* 2024 ஆம் ஆண்டின் படி உலகின் மிக நீண்ட பயணிகள் கப்பலாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த " ஐகான் ஆப் தி சீஸ் " என்ற கப்பல் அறியப்படுகிறது ...இது தன் பயணத்தை ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது..
தயாரிப்பு :
* அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 'ராயல் கரீபியன் என்ற நிறுவனம் இந்த கப்பலை உருவாக்கியது ..
அமைப்பு :
* இந்தக் கப்பல் 1200 அடி நீளம் உள்ளது .
* சுமார் 7,600 பயணிகள் வரை பயணம் செய்யலாம்.
* 20 தளங்களைக் கொண்டது அதில் அதிநவீன தங்கும் அறைகள், 6 நீர் சறுக்கு விளையாட்டுகள் , பனிச்சறுக்கு மைதானம் , ஒரு திரையரங்கம் மற்றும் 7 நீச்சல் குளங்கள் , 40 நவீன ஹோட்டல்கள் உள்ளன ..
* சுமார் 2350 பணியாளர்கள் பணியில் உள்ளனர் ..
முதல் பயணம் :
* உலகின் மிக நீண்ட பயணிகள் கப்பலான "ஐகான் ஆப் தி சீஸ்" என்ற கப்பலின் முதல் பயணம் அமெரிக்காவின் மியாமி துறைமுகத்திலிருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது ...வெப்ப மண்டலங்களை சுற்றி 7 நாட்கள் தனது பயணத்தை தொடங்கியது ...
பெயர் காரணம் :
* அர்ஜென்டினா நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இந்தக் கப்பலுக்கு "ஐகான் ஆப் தி சீஸ்" என்று பெயர் சூட்டியுள்ளார். இதற்கு கடல்களின் சின்னம் என பொருள் படும்.
புகழுரை :
* 'உலகின் மிகச்சிறந்த விடுமுறை அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் எங்களது பொறுப்பின் உச்சம்' என தற்போதைய ராயல் கரீபியன் குழுமத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான 'ஜேசன் லிபர்டி ' கூறியுள்ளார் ..
No comments