தள்ளுவண்டி கடை இட்லி 🍽️🍛
தள்ளுவண்டி கடை இட்லி🍛🍽️
எளிய,நடுத்தர மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிராக மிகப்பெரிய போரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பெரும் வணிக நிறுவனங்களின் உணவு அரசியல் ஒரளவு வெற்றிபெற்றிருக்கிறது. 🍛
இந்தச் சூழலில் அந்தப் பண்பாட்டை காபந்து செய்துகொண்டிருப்பது இதுபோன்ற மனச்சான்று மிக்க பெரியவர்கள் நடத்தும் நடைபாதைக் கடைகள்தான்.🍛
பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களும் உணவு வணிக நிறுவனங்களுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு, உணவு சார்ந்த விவாதங்களை நடத்தி பெரும்பான்மையான மக்களின் உணவுப் பழக்கத்தை சிதைக்கவும் அழிக்கவும் முயற்சி செய்து வருகின்றன.அதிலிருந்து மக்களைக் காப்பாற்றும் செயலை இதில் வரும் பெரியவர் சிறுமி போன்றவர்களே தன்னிச்சையாக செய்துவருகிறார்கள்.🍛
ஒன்றுமில்லை. இன்றைக்கு ஓட்டல்களில் குறுகிய நேரத்துக்கு மட்டுமே இட்லி வைத்திருக்கிறார்கள். பெரிய ஓட்டல்களில் இட்லி என்கிற உணவே கிடையாது. கிட்டதட்ட அழிவு நிலைக்கும் மக்களின் நினைவிலிருந்து இட்லியை மறக்கடித்துவிடும் வைராக்கியத்தோடும் உணவு நிறுவனங்கள் இன்றைக்கு செயல்பட்டு வருகின்றன. அந்த இட்லி உயிர்பிழைத்துக் கிடப்பதே தள்ளுவண்டி கடைகளில்தான். இங்குதான் முதன்மையான உணவாக சகல சைவ,அசைவ குழம்புகள், துணை உணவுகளுடன் இட்லி கொண்டாடப்பட்டு வருகிறது.🍛
சமையலறை இல்லாத வீடுகள் என்ற புதிய மாற்றத்தை நோக்கி மக்களை வேகமாக உணவு நிறுவனங்கள் நகர்த்தி வருகின்றன. மாத்திரை விழுங்க ஒரு தம்ளர் சுடுதண்ணி வேண்டும் என்றாலும் "எங்களிடம் ஆர்டர் போடு டெலிவரி செய்கிறோம்" என்ற சூழலுக்குள் மக்களை உணவு நிறுவனங்கள் கண்களைக் கட்டி அடிமைகளைப் போல் அழைத்துச் செல்கின்றன. இந்தச் சூழலில் தெருவோரக் கடைகளின் பெரியவர்கள்,சிறுமிகள் போன்றவர்கள்தான் நமக்குப் பிடித்த உணவைக் கொடுத்து ஆன்மாவை ஆற்றி, வயிற்றைக் குளிரவைத்து ஆதுரமாக அணைத்துக் கொள்கிறார்கள்.🍛
தள்ளுவண்டி உணவுத் தொழிலை அழித்துவிட வெறியோடு இயங்கிவரும் உணவு நிறுவனங்களிடமிருந்து இவர்களை நாம்தான் இங்கு சென்று உணவருந்தும் செயல் மூலமா காப்பாற்ற வேண்டும்...🍛
நன்றி.....
🍛🍛🍛🍛🍽️🍽️🍽️🍽️🍽️🍛🍛🍛🍛
மக்கள் குரல்.....
உன்னைப் போல் ஒருவன்...
No comments