கிராம வாழ்க்கை எப்படி இருக்கு?!
உண்மையில் கிராமங்களில் அதிகமாக வறுமைக் கோட்டிற்கு கீழே இல்லை. ✨✨
எல்லாம் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு, நகர வாசிகளுக்கு, அவர்கள் வாழ்க்கை வறுமையாகத் தெரிகிறது. சித்தரிக்கிறார்கள். ✨
அவர்களுக்கு அந்த வாழ்க்கை, அப்படிப்பட்ட வாழ்க்கையே போதுமானது என்று நிம்மதியாக வாழ்கிறார்கள். ✨
கிராமம் என்றாலே வறுமை என்ற கருத்து பரவலாக உள்ளது. அது சரியல்ல. ✨
வறுமை நகரங்களிலும் இருக்கிறது.... அதிகமாக... பரிதாபமாக. ✨
சாலை ஓரங்களில், சாக்கடைக் கரைகளில் அவர்கள் வாழும் வாழ்க்கைதான் வறுமையானது... மிகவும் பரிதாபத்துக்குறியது.💫
பெரிய கட்டிடங்கள், எல்லா பொருளும் கிடைக்கும் கடைகள் நினைத்ததும் வர போக வாகன வசதி நல்ல ஹோட்டல் எல்லாம் இருந்தால் தான் வசதி என்று நினைப்பவர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு தெரியாது காலையில் எழுந்து, விடியும் முன்னரே காலை கடன்களை முடித்து, 6மணிக்கெல்லாம் இரவு பொங்கிய கஞ்சியை அடைத்து எடுத்து கொண்டு, காட்டு வேலைக்கு சென்று வேலையை முடித்து, சாயங்காலம் வரும்போது வழியில் ஆட்டுக்கு தீவனம் ஒடித்துகொண்டு கட்டி தலையிலோ வண்டியிலோ வைத்து கொண்டு வீடு வந்து, அதை கால்நடைகளுக்கு கட்டி விட்டுட்டு தண்ணி வைத்து குளித்து முடித்து, கொஞ்ச நேரம் அக்கம் பக்கத்தில் உக்காந்து உன் காட்டில் எப்பூடி விளைச்சல் என் காட்டில் எப்படி விளைச்சல் என்றும் அப்படியே ஊரில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டு விட்டு, இரவு உணவை முடித்து தூங்கும் வாழ்க்கை முறை அருமையான வாழ்வு அது கிடைக்காத பலர் ஏங்குகின்றனர்..💫
கிடைத்ததைக் கொண்டு எப்படி சாமர்த்தியமாய் வாழ வேண்டும் என்பதை கிராம மக்களிடம் நகரவாசிகள் பாடம் படிக்க வேண்டும்💫
புல்லையும் புல்லாங்குழல் ஆக்கும் திறமைசாலிகள் கிராமவாசிகள், திறமை இருந்தும் அவர்கள் இப்படியே வறுமை கோட்டிற்குள் இருக்க காரணம் எவருக்கும் துரோகம் வஞ்சகம் பாதகம் செய்ய துணியாத அவர்களது அந்த வெள்ளை மனமே💫
மக்கள் குரல் 2🫴....
உன்னைப் போல் ஒருவன்.....வருவான்....
No comments