டேய் நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கல டா😉
இந்த கொசுத் தொல்ல தாங்க முடியல நாராயணா😌😛
இதுவொரு நெகட்டிவ் எனர்ஜி பதிவு. எனவே சுயமுன்னேற்ற, பாசிட்டிவ் ஆவேச மனோபாவத்தினர் இதைத் தவிர்த்து விடுவது எனக்கு நல்லது.
இன்றைய தேதியில் ஒரு மனிதன் நிம்மதியாக வாழமுடியாதபடி எத்தனையோ இடையூறுகள் அதன் ஆதாரமான டிசைனிலேயே உள்ளன என்று தோன்றுகிறது. தீவிரமாக யோசித்து, அனுபவித்து விட்டுத்தான் சொல்கிறேன். வாசிக்கும் போது அவை அற்பமான சமாச்சாரங்களாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஒருவர் தனிப்பட்ட வகையில் அனுதினமும் அனுபவிக்கும் போதுதான் உளைச்சலின் கடுமை தெரிகிறது.
*
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதன் விழித்திருக்கும் நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். சிலவற்றை சமாளிக்கிறான். பலவற்றை மென்று விழுங்குகிறான். அனுதினமும் டென்ஷன்தான் இல்லையா?
அவன் அனைத்துக் கவலைகளையும் மறந்து நிம்மதியாக இருப்பது தூங்கும் நேரத்தில் மட்டும்தான். அந்தச் சமயத்தில்தான் அனைத்துக் கவலைகளும் பிரச்சினைகளும் தற்காலிகத்திற்கு மரிக்கின்றன. விழித்து எழுந்த அடுத்த கணமே அத்தனையும் வரிசையாக நினைவிற்கு வருகின்றன.
ஓகே.. இவ்வளவு லோல்படுகிற மனிதன், தூங்கும் போதாவது நிம்மதியாக இருக்கட்டும் என்கிற ஏற்பாடு இயற்கையில் இருக்கிறதா?
ஒன்றுமில்லை சார்.. ஒரு சின்ன உயிரினம்.. கொசு.. டொப்பென்று அடித்தால் டப்பென்று சாகிற அற்பமான ஜீவன். ஆனால் அது பல வருடங்களாக எனக்கு காட்டுகிற ஆட்டமும் இம்சையும் இருக்கிறதே?! எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் உள்ளே புகுந்து ஏழரையைக் கூட்டுகிறது.
சமயங்களில் நானும் பாசிட்டிவ்வாகத்தான் யோசித்துப் பார்ப்பேன். ஆதிமனிதன் வனத்தில் வாழ்கிற போது உறக்கத்தில் எத்தனை இடையூறுகளை, உயிர் அச்சங்களை எதிர்கொண்டிருப்பான்? அதனுடன் ஒப்பிடும் போது இன்றைய நவீன, நகரத்து வாழ்க்கையில் நாம் பெருமளவு பாதுகாப்பாக உறங்குகிறோமே என்று கூட தோன்றும்.
அது கூட வேண்டாம். இன்றைய தேதியிலேயே சாலையில் உறங்குகிறவர்கள் எத்தனை பாடு படுவார்கள், அத்தோடு ஒப்பிட நாலு சுவற்றின் நடுவே உறங்குவதற்கு உனக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமே? எல்லாவற்றையும் பிரச்சினையாகவே பார்க்க வேண்டுமா... என்றெல்லாம் எனக்கே நான் பாசிட்டிவ் பானத்தை ஊட்டிக் கொள்ளத்தான் முயல்வேன்.
ஆனால் அதெல்லாம், அடுத்த கொசு.. காதுக்கருகில் 'ஙொய்..' என்று பறந்து செல்லும் வரையில்தான். சற்று அடங்கியிருந்த கொலைவெறி மீண்டும் எழுந்து விடும். சற்று நிம்மதியாக தூங்கக் கூட முடியாமல் 'என்னடா.. வாழ்க்கை இது..' என்று எரிச்சலாகி விடும்.
*
எனக்கு சைனட்டிஸ், சுவாச அலர்ஜி, காது இரைச்சல் எனப்படும் Tinnitus என்று கண்ணி இணைப்புகளாக சில ENT உபாதைகள் உண்டு. பல வருடமாக இதனுடன் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அறுவைச் சிகிச்சைக்கு முயலும் போதெல்லாம் அதை விடவும் அவசிய செலவு வந்து விடுவதால், மருந்துகளின் மூலம் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.
"ரொம்ப இம்சையா இருக்கு டாக்டர்" என்றால் அவர் அதற்கான காரணங்களில் ஒன்றாக "ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க. மைண்டை ரிலாக்ஸாக வெச்சுக்கங்க" என்று கூலாக சொல்வார். அவர் நோக்கில் அது சரிதான்.
ஆனால் எனக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுவதே அந்த உபாதைகளால்தான் என்று எப்படி விளக்குவது?
*
'உனக்கும் கீழே உள்ளவர் கோடி' என்கிற பாலிசியின் படி இதை விடவும் மோசமான நோய்களால், குறைபாடுகளால் உள்ள மனிதர்கள் உன்னைச் சுற்றி இருக்கிறார்களே'என்று என்னையே சமாதானப்படுத்திக் கொள்ளத்தான் முயற்சிப்பேன்.
ஆனால் அடுத்த முறை கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படும் போது 'ஙொய்யால.. என்ன கருமம் பிடிச்ச வாழ்க்கைடா இது?!" என்று தன்னிச்சையாக நொந்து கொள்வதைத் தவிர்க்க முடிவதில்லை.
*
மறுபடியும் அதேதான். நாம் சின்னச்சின்ன விஷயங்களில் கூட நிம்மதியாக இருக்க முடியாதபடி இயற்கையின் டிசைனிலேயே நிறைய சதிகள் உள்ளனவோ என்று தீவிரமாக நம்புகிறேன்.
'இவரே பாம் வைப்பாராம். இவரே அப்புறம் எடுப்பாராம்' என்பது மாதிரி, உயிரினங்களை இயற்கையே படைத்து விட்டு அதில் ஆயிரம் ஏழரைகளையும் கூட்டி வைத்திருக்கும் இந்த அபத்தமான விளையாட்டை என்ன டேஷிற்கு ஆட வேண்டும் என்றெல்லாம் சமயங்களில் தோன்றி விடுகிறது.
*
'மனிதா விழித்தெழு.. வாழ்க்கை என்பது போர்க்களம்' என்றெல்லாம் உபதேசங்களைத் தூக்கி வருபவர்கள் தயவுசெய்து ஓடி விடுங்கள். கொலைகாண்டாகி விடுவேன்.
இப்படியாவது சற்று அனத்த விடுங்கள். இந்த அனத்தல் வழிபாட்டில் என்னுடன் இணைய விரும்புபவர்கள் கமெண்ட் பாக்ஸில் வந்து மூக்கைச் சிந்திக் கொண்டாடலாம். 😀
படித்ததும் பிடித்ததும் 👋👈👈
Comment விரும்பி❤️🌹👍
எங்க வீட்டிலும் வீசிங் பிரச்சனை இருப்பதால் நாங்க mosquito repellent யூஸ் பண்ண மாட்டோம்.only கொசு bat தான்.நாங்க வாடகை வீட்டில் இருந்த போது, Velcro mosquito net போட்டுக் கொண்டோம்.அது கொஞ்சம் சீப் தான். மொத்த வீட்டுக்கே(கிச்சன், பெரிய பால்கனி,3 பெட்ரூம்,பாத்ரூம் ஜன்னல்கள்) 6,000₹ தான் ஆனது.நீங்க இதை ட்ரை பண்ணலாம்.சொந்த வீட்டுக்கு வந்தவுடன் sliding model strong mosquito net போட்டோம்.வாசல் கதவுக்கு கூட போட்டாச்சு.ஆனா செலவு தான் 70,000₹ ஆச்சு.
பிரச்சனை இல்லாதவர்கள் - இனி பிறக்கப் போகிறவர்களும்,
இங்கிருந்து போனவர்களும் தான்.எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கம் உண்டு.ஒரு பக்கம் பிரச்சனை இருந்தால்,அடுத்த பக்கம் தீர்வு இருக்கும்.அதைக் கண்டுபிடித்து விட்டு....அடுத்த பிரச்சனையை பார்க்க போக வேண்டியது தான்👍😁
இவ்வளவு சொல்றேனே நான் புலம்ப மாட்டேனான்னு கேக்காதீங்க.அடுத்தவர் பிரச்சனைக்கு ஆயிரம் தீர்வு சொல்வேன்.எனக்குப் பிரச்சனை வந்தால் என் மூளை வேலை செய்யாது.So இதெல்லாம் mutual.உங்களுக்கு நான் சொல்வேன்,எனக்கு நீங்க சொல்ல வேண்டும்.அவ்ளோ தான்🤩
பிகு:- ஆனாலும் இந்த மீள் பதிவுக்கு இவ்வளவு பெரிய கமெண்ட் போட்டிருக்கேனே,நான் வெட்டியா இருக்கேன்னு மட்டும் நினைச்சுடாதீங்க😜
மீண்டும் வருவார்கள்........
No comments