காத்து வாக்குல ரெண்டு கதை -🎥🍿 (கருணை)

 


காத்து வாக்குல ரெண்டு கதை - 🍿🎥

 கருணை



 

ஒரு ஆறு வயது சிறுவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்துகொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான். 

ஒருகடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து" எந்த பொம்மை வேண்டும் என்றான் . அவள்

கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து "அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். 

அதற்கு சிரித்துகொண்டே அந்த முதலாளி உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று

கேட்டார். 


அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். 

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே

எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்று மீதியை கொடுத்தார்.

சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான். 



இதை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம் "அய்யா ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை

வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டிர்களே அய்யா", என்றான். 

அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால் தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது அவனுக்கு அந்த சிப்பிகள் தான் உயர்ந்தவை. நாம்

பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம் தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன் மேலும் தன் தங்கை

கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றோ ஒரு நாள் அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்கபட வேண்டும் என்றார்...

💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚



காத்து வாக்குல ரெண்டு கதை - 🍿🎥


 கருணை


ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.




கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான்.முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது.
வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.:

பாத்து போக கூடாதா? " " என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.

அடடா...ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்?

எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.

அதோடு " தம்பி
இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.

உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிகொள்' என்றார்.

மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.

முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது.பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைது சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் " தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? " என்றார்.

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். " அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி"...

😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂






No comments

Powered by Blogger.