விளக்கு நூல்கள் - அரசு தேர்வு பயிற்சி
விளக்கு நூல்கள்:
1. அகல் விளக்கு - மு.வரதராசனார்
2. பாவை விளக்கு - அகிலன்
3. குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4. இரட்டை விளக்கு - நா.பிச்சைமூர்த்தி
5. கொடி விளக்கு - இரா.மீனாட்சி
6. விளக்கு மட்டுமா சிவப்பு - கண்ணதாசன்
7. கை விளக்கு - இராஜாஜி
அகல் விளக்கு :
அகல் விளக்கு (agalvilakku) என்பது மு. வரதராசன் இயற்றிய புதினமாகும்.இரு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் சமுதாய சிந்தனைகளைக் கூறியுள்ளார்.மு. வ. வின் அகல்விளக்கு எனும் இந்நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவரது அகல் விளக்குடன் பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
பாவை விளக்கு:
ஒரு எழுத்தாளனின் உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். தீயவன் உதவியின்றியே ஒரு பெரிய புதினம் மனத்தைக் கவரும் முறையில் தோன்றலாம் என்பதற்கு பாவை விளக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் அ.ச.ஞா.முத்திரை குத்துகிறார் இந்நாவலுக்கு.பல மொழிகளில் மொழியாக்கம் கண்ட இந்நாவல் திரு.சிவாஜி கணேசனால் திரைப்படமாகவும் வெளிவந்தது.
குடும்ப விளக்கு
மகாகவி பாரதியார், 1935-ல் “சுப்ரமணிய பாரதி கவிதா மண்டலம்” என்ற இதழில் ”தகுந்த குடும்பம் சர்வ கலாசாலை” என்று தொடங்கும் கவிதையில், ஒரு நாளில் குடும்பத்தலைவி ஒருத்தி மிகப்பொறுப்போடு இல்லறக் கடமைகளை இனிதே முடித்து இன்பம் அடைந்தால்; சிறிதயர்ந்தாள் என்று முடிகிறது. அந்த நெடிய கவிதையின் விரிவாக்கச் சித்திரமாகத்தான் 1942 ஆம் ஆண்டில் பாரதிதாசன் அவர்கள் எழுதிய ”குடும்ப விளக்கு”. ஒரு நாள் நிகழ்ச்சி என்கிற புதுமைக் குறுங்காவியமாக அமைந்தது. அன்புப் பிணைப்பினால் இல்லறக்கடமைகளை, வேலைகளை ஓயாது ஒழியாது ஒன்று விடாமல் தானே முகம் சுளிக்காது அயர்ந்து விடாமல் அவற்றை முடிக்கிறாள்
குடும்ப விளக்கு 1942-ஆம் ஆண்டு வெளிவந்தபோது பெண்கள் வெளியில் சென்று வருவாய் ஈட்டும் நிலை நிலையில்லை. இந்த சூழலில்தான் குடும்ப விளக்கு வெளிவந்தது.
கொடி விளக்கு:
கவிஞர் இரா. மீனாட்சி (r.meenakshi) ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் ஆய்வாளர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், புதுக்கவிதைப் படைப்பில் குறிப்பிடத்தக்கவர். சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர். தற்போது ஆரோவில் சர்வதேச நகரத்தில் தொண்டாற்றி வருகிறார். இவர் எழுதிய “உதய நகரிலிருந்து” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. மேலும் இவர் எழுதிய செம்மண் மடல்கள் என்னும் நூலும் 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றுள்ளது. சிறந்த சித்த மருத்துவச் சேவைக்காக ஸ்ரீபுத்து மகரிஷி அறக்கட்டளை வழங்கிய சித்த மருத்துவச் சேவைச் செம்மல் என்னும் விருதினையும் இவர் பெற்றுள்ளா
விளக்கு மட்டுமா சிவப்பு
கதை கரு மிகவும் சிறியதுதான். கிராமத்தில் நன்றாய் வாழ்ந்த ஒரு குடும்பம் தாய் தந்தையை இழந்து பொருளாதார சிக்கலினால் பிழைக்க சென்னைக்கு வருகிற
கை விளக்கு
இந்த நூல் கைவிளக்கு, ராஜாஜி அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
பகவத்கீதை கைவிளக்கு - முழு பகவத்கீதையின் தமிழாக்கமும் விளக்கமும்.
✨✨✨✨✨✨✨✨நன்றி✨✨✨✨✨✨✨✨
No comments