TNPSC Tricky &Repeated Questions..அதிகமாகவும், சிந்தித்துப் பார்த்து விடையளிக்கும் வினாக்கள் முழுமையான விளக்கம்🔸
TNPSC 🔸 TAMIL AND GK
Creative questions with answers
and additional information....
கேள்வியும் விளக்கமும்-1🔸
_______________________________________________
கிறிஸ்தவர்களின் தேவாரம்?
இரசட்ணிய மனோகரம்🔸
கிறிஸ்தவர்களின் கலைக்களஞ்சியம்?
தேம்பாவணி..🔸
H.A கிருஷ்ணப் பிள்ளை
வைணவ வேளாளர் மரபில் தோன்றிக் கிறித்துவராக மாறி, கிறித்தவக் கம்பன் என்று புகழப் பெறுபவர். ஜான்பன்யன் என்பவர் எழுதிய Pilgrims Progress என்ற நூலை இரட்சண்ய யாத்திரீகம் எனத் தமிழ்ப்படுத்தினார். இவர் பாடல்கள் ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் போல் உருக்கமாக அமைந்துள்ளன.
கிறித்தவர்களின் தேவாரம்என்றழைக்கப் பெறும் இரட்சண்ய மனோகரம் என்ற நூலையும், இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்யக் குறள், போற்றித் திருஅகவல் என்ற நூலையும் பாடினார்.
இலக்கணச் சூடாமணி, கிறித்தவரான வரலாறு என்ற உரைநடை நூல்களையும் காவிய தர்ம சங்கிரகம் என்ற தொகுப்பு நூலையும் எழுதினார். கால்டுவெல்லின்பரதகண்ட புராதனம் என்ற நூலையும் வேதமாணிக்க நாடாரின் வேதப் பொருள் அம்மானை என்ற நூலையும் பதிப்பித்தார். பெர்சிவல் பாதிரியாருக்குத் தமிழ் கற்பித்தார்; தினவர்த்த மானியின் துணை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
வீரமாமுனிவர்..
தேம்பாவணி (Thembavani) என்னும் நூல் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதற் பெரும் செய்யுள் வகை நூலாகும். இந்நூல் இத்தாலிய நாட்டவரான வீரமாமுனிவர் அவர்கள் தமிழில் திறம்பட ஆக்கிய நூல் எனப் புகழப்படுகிறது. கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கமென்றே இந்நூலை அறிஞர்கள் மதிப்பிடுகின்றனர்.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
கேள்வியும் விளக்கமும்-2🔸
_______________________________________________
தென்னிந்தியாவின் ஜான்சிராணி அஞ்சலையம்மாள்.🔸
தமிழ்நாட்டின் ஜான்சி ராணி..
ராணி வேலு நாச்சியார்.🔸
_______________________________________________
யார் உண்மையான
ஜான்சி ராணி லட்சுமிபாய்🔸🔸🔸
இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, மராத்தி-झाशीची राणी, நவம்பர் 19, 1828–சூன் 18, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.
இவர் சிறு வயதிலேயே குதிரையேற்றம், வாள் வீச்சு, தற்காப்புக்கலைகள் என்ற அனைத்தும் கற்றுக்கொண்டார். 14வது வயதில் ஜான்சியை ஆண்ட ராஜா கங்காதர் ராவ் நெவல்கர் என்பவரை 1842ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அன்று முதல் மணிகர்ணிகா ராணி லட்சுமிபாய் என அழைப்பதுடன், ஜான்சியின் ராணியாகவும் பதவியேற்றார்.
தென்னிந்தியாவின் ஜான்சிராணி அஞ்சலையம்மாள்
1931 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய மகளிர் காங்கிரசு கூட்டத்திற்கு அஞ்சலை தலைமை தாங்கினார்.
1932-இல் காந்தியின் மது ஒழிப்புக் கொள்கைக்கு ஆதரவாகப் பொதுமக்களை திரட்டிக் கள்ளுக்கடை மறியலை நடத்தினார், இதனால் ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனை பெற்று பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
1933 சட்டமறுப்பு மறியலில் பங்கேற்றார். அதே ஆண்டு அந்நியத் துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு மூன்று மாத சிறைத்தண்டனை பெற்றார்.
1934-இல் காந்தி, கடலூருக்கு வந்தபோது அஞ்சலையம்மாளை சந்திக்க முயன்றார். பிரித்தானிய அரசு காந்தியடிகள் அஞ்சலை அம்மாளைப் பார்க்க தடை விதித்தது. ஆனால் அஞ்சலை அம்மாள் பர்தா அணிந்து ஒரு குதிரை வண்டியில் வந்து காந்தியைச் சந்தித்தார். அஞ்சலையின் துணிவைக் காரணமாகக் காட்டி, காந்தியடிகள் இவரை "தென்னிந்தியாவின் ஜான்சிராணி" என்று அழைத்தார்.
தமிழ்நாட்டின் ஜான்சி ராணி..
ராணி வேலு நாச்சியார்
இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய முதல் தமிழ் ராணி. ராணி வேலு நாச்சியார் தென்னிந்தியாவில் ஒரு எழுச்சியூட்டும் பெண்மணி...ராணி வேலு நாச்சியார் தெற்கு தேச வீரப் பெண்மணி..
வேலு நாச்சியாருக்கு மக்களால் உயர்ந்த மரியாதையுடன் வழங்கப்பட்ட 'வீரமங்கை' அல்லது துணிச்சலான பெண்மணி என்ற சிறப்புப் பெயர் தமிழகத்தில் இன்றும் உள்ளது....
ராணி வேலு நாச்சியார் ஒரு படையை உருவாக்கி, ஹைதர் அலியின் ராணுவ உதவியுடன் 1780-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார்.
ராணி வேலு நாச்சியார் தனது கணவர் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட பிறகு போரில் ஈர்க்கப்பட்டார்....
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
Next part soon......
No comments