Tricky question ⁉️ collection Tamil and GK
ஒரே மாதிரி கேள்விகள்
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
தாகூரின் கடிதங்கள் என்னும் நூலை எழுதியவர்?
சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள தாகூரின் கடிதங்கள் என்னும் நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் த.நா. குமாரசுவாமி🔸
பாரதியின் கடிதங்கள் என்ற நூலை எழுதியவர்?
பத்மநாதன்..🔸
கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல், இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை, பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இது. திலகர், மு. இராகவையங்கார், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டோனால்டு, பரலி சு. நெல்லையப்பர் முதலானவர்களுக்கு எழுதிய இக்கடிதங்கள் நுட்பமான வாசிப்புக்கு உரியவை. பாரதி புதையல் திரட்டுகள், சித்திரபாரதி ஆகிய அருங்கொடைகளை வழங்கிய பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன் (1917) அவர்களின் பெருமுயற்சியில் உருவான நூலின் செப்பமான இரண்டாம் பதிப்பு இது.
✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
பறவை உலகம் என்னும் நூலை எழுதியவர்?
சலீம் அலி.🔸
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி அவர் எழுதியதே
இந்தியாவில் பறவையியல் பற்றிப் பேசும் போது மறக்கக் கூடாத பெயர் சாலீம் அலி. பறவை உலகம் இந்தியப் பறவைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் ஒரு கையேடு. பறவைகளைப் பற்றி மூன்று கட்டுரைகளும், நூற்றியோரு பறவைகளை பற்றிய தகவல்களையும் அவற்றின் ஓவியங்களோடு இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள். இத்தனை பறவைகளின் அடையாளங்களையும் குணாதிசியங்களையும் படிக்கும் போது மெட்டலர்ஜி பாடம் தான் நினைவுக்கு வருகின்றது.அப்போது படிக்கும் போது எல்லாமே புரியும், ஆனால் ஒரு செமஸ்டர் முழுக்க உட்கார்ந்து படித்தாலும், கடைசியில் எதுவும் மனதில் நிற்காது. வெங்கலத்திலும் பித்தளையிலும் என்னென்ன தனிமங்கள் என்னென்ன அளவுகளில் இருக்கும் என்பது கூட மனதில் நிற்காது. அது மாதிரி தான் இதுவும். புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் பேராசிரியர். எம்.வி.ராஜேந்திரன். ஆங்கில மூலத்தில் பறவைகள் வரும் இடங்களாக, பம்பாய் போன்ற இடங்களைச் சுட்டியிருந்தால், இவர் இங்கே அதற்கு இணையான வேடந்தாங்கல், திருநெல்வேலி போன்ற இடங்களைச் சுட்டுகிறார். ஆழமான மொழிபெயர்ப்பு. பறவைகளை இனங்கண்டுபிடிப்பது சாதாரண விஷயமேயில்லை. நீர்க்காக்காய் என்று அழைக்கப்படும் ஒரு பறவையைப் பலமுறை பார்த்திருந்த போதும், அது இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும், முக்குளிப்பான், கூழைக்கடா, நீர்க்காகம் என்பவற்றுள் எது என்பதை உறுதிசெய்ய முடியவில்லை. இவற்றுடைய குணாதிசயங்களும் உருவமும் அதிக வித்தியாசமில்லாதவை. அனுபவம், பயிற்சி முக்கியமாக வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே ஒரு பறவையைச் சரியாக இனங்கண்டுகொள்ள முடியும்.
சிறைப் பறவை யார்? ஏன்?
பெரியார்...🔸
அதிக முறை சிறை சென்றதால்...
✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
இந்தியாவின் மிக நீளமான நதி?
கோதாவரி நதி🔸
தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான நதியாக கருதப்படுகிறது. இந்த நதி விருதா கங்கை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நதியின் பிறப்பிடம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள திரிம்பகேஷ்வர். கோதாவரி ஆறு பருவகால நதியாகும், இது பொதுவாக கோடை காலத்தில் வறண்டு, பருவமழையின் போது விரிவடைகிறது..
ஆசியாவின் மிக நீளமான நதி?
யாங்சி.🔸
இது சீனாவின் மிக நீளமான நதியாகும், இது 6,300 கிமீ நீளம் கொண்டது. இது ஆசியாவின் மிக நீளமான நதி மற்றும் சீனாவில் மட்டுமே பாய்கிறது. இது சாங் ஜியாங், டா ஜியாங் மற்றும் ஜியாங் என்றும் அழைக்கப்படுகிறது. இது திபெத்திய பீடபூமியில் உருவாகி கிழக்கு சீனக் கடலில் கலக்கிறது
✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
ஐம்பெரும் காப்பியம் என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்?
மயிலை நாதர்🔸
பழமொழி என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்..
தொல்காப்பியர்🔸
அகராதி என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர்
திருமூலர்.🔸
✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
இந்தியாவின் ஏவுகணை நாயகர்
APJ அப்துல் கலாம்🔸
இந்தியாவின் ராக்கெட் மனிதர்
சிவன்.🔸
இந்தியாவின் ஏவுகணை பெண்மணி
டெஸ்ஸி தாமஸ்.🔸
இந்தியாவின் ராக்கெட் பெண்மணி.
ரிது கரிதால்.🔸
மிஷன் மங்கள்யான் மற்றும் பிறவற்றிற்கான அவரது முழு உறுதி மற்றும் வெற்றிகரமான தலைமையின் காரணமாக ரிது கரிதாலுக்கு 'இந்தியாவின் ராக்கெட் பெண்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
கிறிஸ்தவர்களின் தேவாரம்?
இரசட்ணிய மனோகரம்🔸
கிறிஸ்தவர்களின் கலைக்களஞ்சியம்?
தேம்பாவணி..🔸
✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
தென்னிந்தியாவின் ஜான்சிராணி?
வேலுநாச்சியார்.🔸
தென்னாட்டு ஜான்சிராணி?
அஞ்சலையம்மாள்.🔸
ஜான்சி ராணி...தொடர்ச்சி click here
✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
No comments