உண்மை இல்லாத இடத்தில் உரிமையை எதிர்பார்க்கலாமா?
உண்மையின் நாதம் என்றும் ஜீவனானது.....
அது உரிமையுள்ள இடத்தில் தான் உயிர் வாழ நினைக்கிறது....
பிறப்பில் இறப்பில்
இருப்பது உண்மை மட்டுமே✨✨
இயற்கையும் பிரபஞ்சமும்
கூட உண்மை மட்டுமே ✨✨
காட்டில்,
நதியில்,
மலையில்,
மழையில்..
மழலையின் மொழியில்,
இப்படி இயற்கை எதிலும்
உண்மையாய் வாழுகிறது..
உண்மையில் மட்டுமே வாழுகிறது...
இறைவனிடம் நாம் காட்டாத
போலி முகத்தை...
உரிமையுள்ள இடத்தில்
காட்டும் போது ✨✨✨
இறைவனும் நம்மை
நெருங்க யோசிக்கிறான்...
உண்மையாய் நாம்
உயிர்களிடத்தில் பழகும் போது
இறைவனும் நம்மில்
நெருங்கி வசிக்கின்றான்..
காதலில், கடமையில்
நட்பில்,எதிலும்
உண்மை நம்மை உயர்த்தும் ..
இல்லறத்தில், கடமையில்,
பண்பில் உண்மையே நம்மை
மேன்மைப்படுத்தும்...💫
ஒரு பொய் நம்
வாழ்வில் நுழையும் போது..
அங்கே உரிமை
கொஞ்சம் தள்ளி நிற்கிறது...
கண்ணாடியாய் மனம்
கொஞ்சம் நொறுங்கத்தான்
செய்கிறது✨💫💫
ஆனால்,அதே பொய்
நம் பக்கம் இருக்கும் போது,
மனம் சஞ்சலம் எனும்
துன்பத்தில் உலலுகிறது🦋
வள்ளுவரும் கூறுவார்...
பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் என...
அப்படியாக நம் பொய்களும்,
உண்மை மறைத்த சூழல்களும்,
வாழ்வில் நாம் என்று
நினைத்தாலும் நம்
மனதை உறுத்தாத,
தன் நெஞ்சே தன்னை சுடாத
நினைவுகளாக மட்டும் இருக்க
நாம் நம்மை வடிவமைத்து கொள்ள வேண்டும்...
அள்ளிப் பருக அமிர்தம் போன்ற நன்னீர்....
துள்ளிக் குதிக்க
தேனிசை...
பறவையைப் போல
பறக்க இளமை பொங்கும்
நினைவுகள்...
நன்றி செலுத்த ஆயிரம் ஆயிரம் உறவுகள்...
இன்னும் செய்ய
ஏராளம் ஏராளம் கடமைகள்...
என அடுத்து வரும் அனைத்து
வேளைகளிலும் உண்மையைக்
கரம் கோர்த்து...
நம் உண்மை அன்பை எங்கும் காட்டலாம்...
ஆனால் அது நாம் ஏமாற்றப் படாமல் இருக்கிறோமா
என்ற முன்னெச்சரிக்கை இருக்கும்பட்சமாய் இருத்தல் நலம்..
நமக்கு உரிமை உள்ள இடத்தில்
மட்டும் தான் உண்மை கோபங்கள் வெளி வரும்
அங்கு..
நம் சுய முகங்கள் தெரிந்த இடங்களும் அது மட்டுமே...
அங்கு தான்...
நம் நன்றிகளும்,
நம் நல் வளர்ச்சியும்,
நிரூபிக்கத் தேவையாய் உள்ளது...
உண்மை இல்லாத
போலி முகங்களிடம்...
நம் உண்மை வார்த்தைகள்
வெளி வர தயங்குகிறது....
ஆனால், அவர்கள் தந்த அவமானங்களில் தான்..
அடுத்த இகழ்வை எப்படிக் கையாள்வது என்ற பக்குவமும்,
கிடைக்கிறது...
எனவே அவர்கள் நன்றிக்கு
உரியவர்கள்...
வெற்றியை நோக்கி நம்மை நகர்த்தி செல்லும் படிக்கட்டுகள் என,
கடந்து சென்று...
நாளை நம் கையில் என நடை போடுவோம் 🦋👍
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
No comments