பறவைகள் விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் 🎙️✨
பறவைகள் விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் 🎙️✨
காக்கையின் கரைந்துண்ணல்..
கோமாதாவின் கொடை...
நாயின் நன்றியுணர்வு...
சிலந்தியின் விடாமுயற்சி...
பட்டாம்பூச்சியின் வளர்ச்சி...
என
ஒவ்வொரு உயிரினமும்
நமக்கு உணர்த்தும் படிப்பினைகள்
ஏராளம்✨✨✨
முதலைக் கண்ணீர்,
நரியின் தந்திரம்,
புலியின் பதுங்கல் என
நம்மைக் கவனமாய் இருக்க
வைப்பதும் அவற்றின்
குணங்களே..
பறவை வானில் சிறகை விரித்து பறக்க...
மனிதன் கண்டு பிடித்தான் விமானம்...
ஆயிரம் ஆயிரம் கதைகள்...
விலங்கின் பறவையின்
மூலமே...
குழந்தையும்..
ஏன் நாமும் கூட..
வாழ்வின் ஒவ்வொரு அனுபவத்தையும் கதையாய் கற்றுக்கொள்கிறோம்...
பறவை விலங்கு
நம் வாழ்வின் அங்கம்..
நாம் இன்றி அவை
வாழலாம்..
அவர்கள் இன்றி
நாம் இல்லை..
இது நிதர்சனம்...
எறும்பு முதல் யானை
வரை
இயற்கை பரிமாண வளர்ச்சியில் அதனதன்
வேலையை தவறாமல் செய்யும் உழைப்பாளர்கள்..
ஒவ்வொன்றின் பிறப்பிற்கு ஒராயிரம் அர்த்தங்கள்...
அதன் வழி நம்
பிறப்பை அர்த்தம் உள்ளதாக்குவோம்🦋🦋
நன்றி...உறவுகளே🦋🦋
No comments