தோழி டைரி 🦋📖
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 🦋
தமிழ் தோழி டைரி 📖-1🦋
🦋நட்பு என்றால் நட்பு மட்டுமே.. அதைப் பூர்த்தி செய்ய அதனால் மட்டுமே முடியும்...
காதல் என்றால் கூட அதில் காமம் என்பது அவசியம் ஆனதாய் போகலாம்..
நட்பில் மழலையின் கோபமும்,
தாய்மையின் அன்பும் நிரந்தர பரிசு..
தீராத பேச்சும்,
திகட்டாத அன்பும்,
நம்பிக்கையான உறவுமாய்...
என்றும் வாழட்டும்
அழகான ஆண் பெண் நட்பு🦋
🦋உண்மையான அன்பைக் காட்டிய உறவுகளை ஒருபோதும்
மறக்கவும் முடியாது...
இழக்கவும் முடியாது...
சூழ்நிலைகள் வெகு தொலைவில் நிறுத்தி
நம்மில் அவரை
விலகி நிற்க
செய்யலாம்..
நினைவில் நாம் எவ்வளவு
நெருங்கி இருக்கிறோம்
என்பதை நம்மை நாமே
ஏமாற்றிக் கொண்டு வேண்டுமானால் இல்லை என சொல்ல இயலுமே தவிர..
சுவாசத்தின் எண்ணிக்கைக்கு
சிறிதும் பாதகம் இல்லாத அளவுக்கு நினைவில் சுமக்கும்
இனிய உறவாய் நம்
மனம் கனிந்த உறவுகள்
நம்மோடு தான் பயணப்படுகிறார்கள்🦋
🦋🦋🦋🦋🦋📖📖📖🦋🦋🦋🦋📖📖🦋🦋🦋🦋🦋
பக்கங்கள் சிறகடிக்கும்📖🦋
No comments