பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப்பிணி அறுத்திட வாராய்.. பாடல் வரிகள்
பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப்பிணி அறுத்திட வாராய் ...
முத்தா என் முழுமுதலே முக்திக்கனி அளித்திட வாராய்..
சித்தா என் சிதம்பரனே சித்தத்துள் இறங்கிட வாராய் ...
அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்..
என் அம்பலத்தில் ஆடிட வாராய்! என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ..
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
எத்தனை கருக்குழியில் விழுந்து...
எத்தனை முலைமேடு கடந்து;
எத்தனை கருக்குழியில் விழுந்து..
எத்தனை முலைமேடு கடந்து..
எத்தனை மலமாயையில் உழன்று..
எத்தனை பிறவி எத்தனை பிறவி ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா ...
பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப்பிணி அறுத்திட வாராய்..
அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்..
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ...
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
தாயின் பாசத்தில் வளர்ந்து ..
தந்தையின் நேசத்தில் சிறந்து...
தொடர்ந்த உறவுகளில் கலந்து...
தொடர்ந்த உறவுகளில் கலந்து..
அத்தா உன்னை மறந்தே போனேன் ஐயா! அத்தா உன்னை மறந்தே போனேன் ஐயா!
பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப்பிணி அறுத்திட வாராய்..
அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்..
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ...
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
காணும் கன்னியரை கவர்ந்து...
கவரும் காதலரை புணர்ந்து ...
காணும் கன்னியரை கவர்ந்து..
கவரும் காதலரை புணர்ந்து ...
மோகத் தீயினிலே மகிழ்ந்து..
மோகத் தீயினிலே மகிழ்ந்து ..
மீளாத் துயரில் மூழ்கிப்போனேன் ஐயா..
ஐயா ஐயா ஐயா ஐயா ..
பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப்பிணி அறுத்திட வாராய்..
அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்..
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ...
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
நில்லாப் பொருளையே நினைந்து இல்லா இடம்தேடி அலைந்து..
நில்லாப் பொருளையே நினைந்து இல்லா இடம்தேடி அலைந்து..
பொல்லா தீவினையை சுமந்து செல்லாப் பொருளாய்..
சிதறிப் போனேன் ஐயா ..
ஐயா ஐயா ஐயா ஐயா ...
பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப்பிணி அறுத்திட வாராய்..
அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்..
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ...
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
பழகும் மானிடரை புகழ்ந்து..
பழகிய பின்னே இகழ்ந்து..
பழகும் மானிடரை புகழ்ந்து..
பழகிய பின்னே இகழ்ந்து...
ஆணவப் பேயாக திரிந்து ..
ஆணவப் பேயாக திரிந்து..
அறியாமையிலே அழிந்தே போனேன் ஐயா அறியாமையிலே அழிந்தே போனேன் ..
ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா....
பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப்பிணி அறுத்திட வாராய்..
அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்..
என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ...
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ!
உடலை மெய்யென்று நினைந்து சுடலை
வருமென்று மறந்து..
உடலை மெய்யென்று நினைந்து சுடலை
வருமென்று மறந்து..
ஐம்புல வேட்கையிலே விரைந்து ஆடாத
ஆட்டங்கள் ஆடினேன் ஐயா..
ஐம்புல வேட்கையிலே விரைந்து ஆடாத
ஆட்டங்கள் ஆடினேன் ஐயா..
ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா..
ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா...
வேகும்பிணம் நடுவே கிடந்து மாய வாழ்க்கையினை துறந்து..
வேகும்பிணம் நடுவே கிடந்து மாய
வாழ்க்கையினை துறந்து..
யாவும் நீயென்று உணர்ந்து யாவும் நீயென்று உணர்ந்து..
ஆடும் உன்திருவடியை சேர்ந்திட வேண்டும் ஐயா..
ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும்
ஐயா ...
ஐயா ஐயா..
ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும்..
ஐயா ஐயா ஐயா..
கங்கை அணிந்த கங்கா தரனே செங்கை
அபயம் காட்டிட வாராய்..
மங்கை உடனே மான்மழு ஏந்தி மண்மேல்
என்னை ஆண்டிட வாராய்..
நஞ்சை உண்ட நீலகண்டனே அஞ்சேல் என்று அருளிட வாராய் ..
நச்சுப் பாம்பனி புயங்க நீ என் அச்சம் நீங்க நயந்து வாராய்..
நாத மயமான வேதியனே என் வேதனை அகல விரைந்து வாராய் ..
ஜோதி வடிவான சங்கரனே உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய் ..
ஜோதி வடிவான சங்கரனே உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய் ..
ஜோதி வடிவான சங்கரனே உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய்..
உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய்!
சம்போ சிவ சிவ சிவ சம்போ..
சம்போ சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சம்போ
சிவ சம்போ சிவ சம்போ சிவ
சம்போ!........
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments